தரகு நிறுவனங்களில் வருமான வரி சோதனை

Added : டிச 08, 2019
Share
Advertisement

புதுடில்லி: பங்கு வர்த்தகத்தில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக, மும்பை, கோல்கட்டா, டில்லி ஆகிய நகரங்களில் உள்ள பங்குச்சந்தை தரகு நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பை பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பங்கு வர்த்தகத்தில், 3,500 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மும்பை, கோல்கட்டா, கான்பூர், டில்லி, நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் பங்குச் சந்தை தரகு நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில், 39 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 1.20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X