பொது செய்தி

இந்தியா

பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (26)
Advertisement
பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர். அப்போது நடந்த என்கவுன்டரில் 4 பேரும் சுட்டுக்கொல்லப்படட்னர்.




இந்நிலையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்துக்கு 'உண்மை கண்டறியும் குழுவை' அனுப்பி வைத்தது. அக்குழுவினர் மெகபூப்நகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் பிரேதங்களையும் ஆய்வு செய்தனர்.பின்னர், என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் இதுவரை கிடைத்த தடயங்களை சேகரித்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravan - bangaloru,இந்தியா
08-டிச-201919:10:35 IST Report Abuse
saravan இந்த ஆணையம் எதற்கு.....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
08-டிச-201918:46:32 IST Report Abuse
Balaji மனிதத்தன்மை சிறிதுமின்றி மருத்துவரை சிதைத்தவர்களுக்கு மனித உரிமை எதற்கு????? மனித உரிமை என்பது மனிதத்தன்மை உரியவர்களுக்கு மட்டும் பார்த்தால் போதும்........ அரக்கர்களுக்கு பார்க்க வேண்டியதில்லை..........
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
08-டிச-201915:10:35 IST Report Abuse
Tamilan ஒரு பெண்ணை கொடூரமாக எரித்து கொன்ற போது வரவில்லையே .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X