வருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (36)
Advertisement
வருமான வரி குறையும்: பரிசீலிப்பதாக நிர்மலா தகவல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. வருமான வரி முறையை சீரமைப்பு உள்ளிட்ட மேலும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.




ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக சரிந்தது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கார்ப்பரேட் வரி சமீபத்தில் குறைக்கப்பட்டது. அப்போதே வருமான வரி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நுகர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு நிதி திட்டங்களை அறிவித்துள்ளோம்.

சரியும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கேட்டபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வருமான வரி விகிதம் மாறுமா என்று கேட்கிறீர்கள். ஆமாம் என்று நான் சொன்னால் எப்போது என்று கேட்பீர்கள். 
பட்ஜெட்தான் வரப் போகிறதே, இப்போது ஏன் அறிவித்தீர்கள் என்று கேட்பீர்கள். அதனால், ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதே சமயம், உங்கள் கேள்விக்கு இல்லை என்றும் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது குறித்து ஆய்வு செய்கிறோம். நேரடி வரி முறையில் கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். இவ்வாறு நிர்மலா கூறினார்.

இதன் மூலம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பணம் போய் சேரும். அதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும் என்பதே அரசின் எண்ணமாகும்.அவ்வாறு வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆமாம் என்று நான் கூறினால் எப்போது என்ற கேள்வி எழும். மேலும் ஆமாம் என்று கூறினால் பட்ஜெட் தான் மிக விரைவில் வர உள்ளதே;

இப்போது எதற்கு அறிவிக்க வேண்டும் என்றும் என்னை கேள்வி எழுப்புவர். ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன். அதேபோல் இல்லை என்றும் கூற மாட்டேன். ஏனென்றால் அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.வருமான வரி முறைகளை சீரமைப்பது உள்ளிட்டவை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.வரி செலுத்துவோர் துன்புறுத்தப்பட மாட்டார். அதனால்தான் வரி முறைகளை எளிமையாக்குவதுடன் விலக்குகளும் நீக்கப்பட வேண்டும்.வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி முறையில் கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. அதுபோல மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
08-டிச-201919:52:04 IST Report Abuse
Sathya Dhara அன்புள்ள நண்பர் Believe In One And Only God - Chennai,இந்தியா அவர்களே.....உங்கள் கருத்தினை முற்றிலும் மாற்ற வேண்டும். மாற வேண்டியது மத்திய அமைச்சர் அல்ல.....கான் கிராஸ் அடிமைகள்....புரிகிறதா
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
08-டிச-201919:06:11 IST Report Abuse
Charles முதியோர்கள் சொந்த வீட்டை விற்று வாழலாம் என்றால் அதிலும் capital gain வரியை திணிக்கிறீர்கள் எங்களுக்கு பென்ஷனும் கிடையாது நான் வீட்டை வாங்கும் பொது அமெரிக்கா டாலரை ரூபா 7 .50 என்று மாற்றினேன். தற்பொழுது டாலர் ரூபா 72 யை தொடுகிறது... அப்பட்டியிருக்க எது எங்களுக்கு gain என்றே புரியவில்லை.. தங்களுடைய ரூபாய் மதிப்பு குறைந்தால் எங்கேயிருந்து எங்களுக்கு லாபம்? இதனை வருஷங்கள் முதலீட்டுக்கு வரியில்லாத அரசு பாத்திரத்தின் வட்டியாவது எங்களுக்கு கிடைக்க வேண்டாமா? கனடாவில் ஒரு வீட்டுக்கு விற்ற பணத்தில் வரி கிடையாது, அதைப்போல தாங்களும் வரிவிலக்கு அளிக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201916:48:32 IST Report Abuse
kulandhai Kannan 1992 முதல் வருமானவரி கட்டி வருபவன் என்ற முறையில் கூறுகிறேன். வருமான வரி குறைக்கவேண்டிய அவசியமில்லை. எதிர்கட்சிகளும், மீடியாவும் கொடுக்கும் அழுத்தத்திற்கு பயந்து எந்த அவசரமுடிவும் எடுக்கக் கூடாது. வெங்காய விலை இன்று ஏறும், நாளை இறங்கும். அரசாங்கம்தான் மக்களை வழிநடத்த வேண்டுமே ஒழிய, மீடியாக்கள் அல்ல.
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
08-டிச-201917:07:51 IST Report Abuse
Rajasமக்கள் வரியை (GST ) குறைக்க சொல்கிறார்கள். இந்த அம்மா வழக்கம் போல தவறாக புரிந்து கொண்டு வருமான வரி என்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X