கோத்தபயா சந்திப்பில் ஆளுமையை வெளிப்படுத்திய மோடி

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (47)
Advertisement
 தஞ்சாவூர் ஓவியம் ,அதிசயம்: கோத்தபயா ,ஆளுமை  மோடி

இந்த செய்தியை கேட்க

டில்லியில், ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவும் சந்தித்து பேசினர். அப்போது, இலங்கையில் ராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் தஞ்சாவூர் ஓவியத்தை, கோத்தபயா ராஜபக்சேவுக்கு காட்டி உள்ளார்.

இதன் வாயிலாக, நாட்டின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், தன் ஆளுமையையும், பிரதமர் மோடி பறைசாற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றதும், இரண்டு நாள், அரசு முறை பயணமாக, இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு, மத்திய அரசு, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அதே சமயத்தில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில், டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


பாதுகாப்புடில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், சர்வதேச தலைவர்கள், அதிபர்களை சந்தித்து பேசுவதை, பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். ஐதராபாத் இல்லத்திற்கு, கோத்தபயா ராஜபக்சே வருவதற்கு முன், அந்த இல்லம், பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டது. ஐதராபாத் இல்லத்தில், இரு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசும் அறையில், பிரபல ஓவியர் ரவிவர்மா அல்லது வட மாநில ஓவியர் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டிருக்கும். கோத்தபயா வருவதற்கு முன், அங்கு, ராமர் பட்டாபிஷேகம் காணும் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. திடீரென அந்த ஓவியத்தை, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டனர்.
பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ராமர், சீதை, ராவணன், அனுமர் போன்றவர்களின் படங்களும், இலங்கையை போர் வாயிலாக, தீக்கிரையாக்கிய படமும், ராவணனுக்கு எதிராக ராமர் போர் புரியும் காட்சியும் நிறைந்த, பெரிய தஞ்சாவூர் ஓவியம் ஒன்று, அங்கு மாட்டப்பட்டது. கோத்தபயா ராஜபக்சே, ஐதராபாத் இல்லத்தில் நுழைந்ததும், அந்த ஓவியத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது; அவருக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டது. அந்த ஓவியம், இந்தியா வலிமையான நாடு என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.


ஆலோசனைமேலும், சீதையை ராவணன், இலங்கைக்கு கடத்தி சென்றதும், அனுமர், சீதையை கடல் கடந்து காப்பாற்ற சென்ற காட்சியும், இலங்கையை தீக்கிரையாக்கிய காட்சியும், அந்தஓவியத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு ஓவியத்தின் வாயிலாக, இந்தியாவின் வலிமையையும், ஹிந்து மதத்தின் பெருமையையும், கோத்தபயா ராஜபக்சேவுக்கு, பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். பின், இருவரும் நடத்திய முக்கிய ஆலோசனையில், இலங்கையின் வளர்ச்சிக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பது, இலங்கை தமிழர்களுக்கு சமநீதி, சம உரிமை வழங்கும் வகையிலான அரசியலமைப்பு சட்ட திருத்தம் அமல்படுத்துவது என்றும் முடிவானது.


பாராட்டுமேலும், பாதுகாப்பு விவகாரத்தில், ராணுவ ரீதியாகவும் இலங்கையுடன் இணைந்து, இந்தியா செயல்படுவது என்றும், இலங்கை பொருளாதாரத்தை பலப்படுத்த, இந்தியா, 2,870 கோடி ரூபாய் கடன் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றதும், தமிழில் பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், இந்தியாவிற்கு கோத்தபயா ராஜபக்சே வந்தபோதும், 'டுவிட்டர்' பக்கத்தில், தமிழில் வரவேற்றார்.'சீனாவிடம் நெருக்கம் காட்ட வேண்டாம்' என, கோத்தபயா ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு, கோத்தபயா ராஜபக்சே, 'சீனாவிடம் கடன் பெற்றுள்ளோம். அந்த கடனை அடைக்க, நீங்கள் உதவ வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். 'இலங்கை வாழ் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், கோத்தபயா ராஜபக்சே ஆட்சியில் பாதிப்பு ஏற்படக் கூடாது; அப்படி பாதிப்பு ஏற்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன்' என்பதை சுட்டிக்காட்டு வதற்கு தான், இலங்கையில் ராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் ஓவியத்தை, அங்கே மாட்டி வைத்துள்ளார்.அதனால் தான், 'இந்திய பிரதமர்களில் இந்திராவை அடுத்து, மோடியை தான், ஆளுமை மிக்க தலைவராக பார்க்கிறேன்' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், கோத்தபயா ராஜபக்சே பாராட்டி பேசியிருக்கிறார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-டிச-201916:38:49 IST Report Abuse
Malick Raja கேட்பவர்கள் இது பற்றி ஏதும் சொல்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
08-டிச-201915:25:46 IST Report Abuse
Rajas இந்த கோத்தபாய ராஜபக்ஷே குடும்பம் சாதாரணமானது அல்ல. சீனாவை காட்டி நம்மிடமும் நம்மை காட்டி சீனாவிடமும் தேவையானதை பெற்று கொள்வார்கள். மக்களின் உணவு பழக்க வழங்கங்கள், கல்வி, கலாச்சாரம் போன்றவை நம்மை போலவே இருப்பதால் அதை நாம் அவர்களுக்கு ஏற்றுமதி செய்வதில் வெற்றி கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201913:49:20 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி இலங்கை. 2009 பின்னர் சீனாவில் கிடுக்கி பிடியில் இறுக்கி விட்டது... அதற்கு முதல் தூர இருந்தே பார்த்தது.. இந்த பிலிம் காட்டுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.. மலேஷியா பிரதமர் மகாதீர் குட்டி.. இந்தியாவை சிறிதளவு கூட மதிப்பதில்லை.. ஆனால் சீனாவின் காலில் விழுவான் என்று ஈழ தமிழர் பிரச்சினையில் தேவை இல்லாமல் இந்தியா மூக்கை நுழைத்ததோ அன்றே இந்தியாவின் பாதுகாப்பு கேள்வி ஆகிவிட்ட்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X