பொது செய்தி

தமிழ்நாடு

நேற்று அலமாதி, இன்று மேட்டுப்பாளையம், நாளை...?

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தமிழகத்தில், சுற்றுச்சுவர்இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது, தொடர் கதையாகி வருவதால், இது தொடர்பான விதிமீறல்களை தடுக்க, அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூர் கிராமத்தில், சுற்றுச்சுவர்இடிந்து, வீடுகள் மீது விழுந்ததில், 17 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.


தொடர் கதை

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, அனைவரது கவனமும், நடூர் பக்கம் திரும்பியுள்ளது.இது, தமிழகத்தில் புதிதாக நடக்கும் சம்பவம்அல்ல. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி எடபாளையம் பகுதியில், 2014ல், தனியார் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 11 பேர் உயிரிழந்தனர். அப்போதும் சரி, இப்போதும் சரி, இறந்தவர்களுக்கு இழப்பீடு, உரிமையாளர் கைது போன்ற வழக்கமான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல, ஒவ்வொரு முறையும், சுவர் இடிந்து விழுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதை அரசியலாக்குவதை காட்டிலும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தடுக்க, நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

இதுகுறித்து, கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது:தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது கட்டட விதிகளின்படி, 2 மீ., உயரம் வரையே, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.


அனுமதி பெறவேண்டும்

பாதுகாப்பு காரணங்களுக்காக, அதிக உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதாக இருந்தால், உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து, தனியாக அனுமதி பெற வேண்டும்.சுற்றுச்சுவர் கட்ட குறைந்தது, 2 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைக்க வேண்டும். தரைமட்டத்தில், ஒரு பீம், 6 அடிக்கு மேல் ஒரு பீம் அமைக்க வேண்டும். நீளவாக்கில், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைப்பது அவசியம். இதனால், காற்றோட்டம் தடைபடாமல் இருக்கும்.சுவரின் இரண்டு பக்கத்திலும், தரைமட்டம் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பக்க தரை மட்டம், மண் கொட்டி மேடாக்கப்பட்டால், அதன் அழுத்தம் சுவர் இடிந்து விழ வழிவகுத்துவிடும். இது போன்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால், 17 பேரின் இறப்பு தடுக்கப்பட்டு இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


விழிப்புணர்வு தேவை


இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:இது போன்ற விபத்துகள் நடந்தால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும், கட்சிகளும், அதிகாரிகளும், அந்த இடத்தில் குவிவது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. எதிர்காலத்தில், இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நகர், ஊரமைப்பு சட்டப்படி, சுற்றுச்சுவர்களுக்கான விதிமுறைகள் தெளிவாக உள்ளன. இதன் அமலாக்கம் குறித்து, பொது மக்களும், துறை அதிகாரிகளும் கவலை கொள்ளாததே, இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் வலு குறைந்த சுவர்கள் இடிந்து விழுவதற்கு, 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இக்காலத்தில், சுவர்களை ஒட்டி மக்கள் தங்குவதை தடுக்க, பேரிடர் மேலாண்மை அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-டிச-201916:18:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni RENDUKALAKAMKALUM எண்ணம் ஒண்ணாகவே இருக்குங்க தங்கள்மட்டுமே வாழனும் என்று ம் ஜெயிக்கவேண்டும் முதல்வராகணும் பலகோடிகள் குவிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோள் காங்கிரஸ் லே பசிக்கு அவ்ளோபணவெறி இல்லாதைக்கு இருந்தால் இவ்ளோ கண்றாவிகளை சந்திசிரிக்கும்படி செய்து பலமில்லியன்களிலே குவிச்சுட்டு நேர்மையானவன்போல பேசுவார்களா எவனும் நேர்மையும் இல்லே சுத்தமும் இல்லே என்பது தெரிஞ்சும் எதுக்கு ஜனம் ஓட்டுப்போட்டு ஏமாறுதுங்க??????
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08-டிச-201913:47:03 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சட்ட விரோத அக்கிரமிப்புக்களையும் தடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201913:22:29 IST Report Abuse
Mani . V மீடியா முன் பைத்தியங்கள் மாதிரி பேட்டி கொடுக்க மட்டுமே தெரிந்த, ஒன்றுக்குமே உபயோகம் இல்லாத மந்திரிகள் தமிழகத்தை ஆள்வது நம் அனைவருக்கும் பெருமையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X