சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து அதிரடி: கச்சிதமாக காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (48)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், ஆளுங்கட்சி, மேயர், கூட்டணி கட்சிகள்,

அ.தி.மு.க., தலைமை யின் அதிரடி நடவடிக்கை, அனைத்து கட்சியினரையும், திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆளும் கட்சியின் வியூகத்தை, எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், எதிர்க்கட்சியினர் தவித்து வருகின்றனர்.

முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்றபோது, 'அவரது ஆட்சி சில வாரங்களில் கவிழ்ந்து விடும்; சில மாதங்களில் கவிழ்ந்து விடும்' என, எதிர்க்கட்சிகள் பேசின. அனைத்தையும் பொய்யாக்கி, தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறார். கட்சியில், இரட்டை தலைமை உருவானதும், முடிவுகள் எடுப்பதில், சிரமங்கள் ஏற்பட்டாலும், கட்சியை கட்டுக்கோப்போடு வழிநடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய கூட்டணியை, அ.தி.மு.க., தலைமை கட்டமைத்தது.கடும் போட்டி


எனினும், தேனி தொகுதியில் மட்டும், வெற்றி கிடைத்தது. மற்ற தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது, அ.தி.மு.க., தலைமைக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதுகுறித்து கவலைப்படாமல், தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அடுத்து, வேலுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும் என, அனைவரும் கூறினர்; அதை பொய்யாக்கியது, அ.தி.மு.க., தலைமை. அந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்றில், அ.தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்று, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி கள் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, அ.தி.மு.க.,வினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. தி.மு.க., கூட்டணி, தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தயங்குகிறது என்ற பிரசாரம் செய்தது. அதை உடைக்க, அ.தி.மு.க., முடிவு செய்தது.அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் வரப்போகும் தகவல் வெளியானதும், அ.தி.மு.க.,வில், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் என, அனைவரும் போட்டிக்கு ஆயத்தமாகினர்.கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., தலைமையை மிரட்டி, அதிக அளவில், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை பெற விரும்பின. அவர்கள் கனவை தகர்க்க, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து, மறைமுக தேர்தல் வழியே, அவர்களை தேர்வு செய்ய, அவசர சட்டம் பிறப்பித்தனர்.


அதிர்ச்சி


இதனால், கூட்டணி கட்சிகள், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதை, சிலர் விரும்பாததால், பல இடங்களில் போட்டி தவிர்க்கப்பட்டது. புதிதாக, ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில், வார்டு வரையறை செய்யப்படவில்லை. அனைத்து தரப்பு மக்கள் ஓட்டையும் பெற, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அந்த திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.

இதை எதிர்த்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், எதிர்க்கட்சிகள் மவுனம் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவித்தது. அ.தி.மு.க., தலைமையின் அடுத்தடுத்த நடவடிக்கை, அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி கவுன்சிலர் மற்றும் தலைவர் பதவிக்கு, கட்சி அடிப்படையில், தேர்தல் நடக்கப் போவதில்லை. எனவே, அதில் யார் வெற்றி பெற்றாலும் பாதிப்பில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும். எனவே, அதில் கவனம் செலுத்தி, அதிக இடங்களைப் பெற, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் என்ன முடிவெடுப்பது என தெரியாமல், தவித்து வருகின்றன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-டிச-201913:29:50 IST Report Abuse
இந்தியன் kumar ரவுடிகளும் அடிமைகளும் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும். வரும் சட்ட மன்ற தேர்தல் அதட்கு வாய்ப்பாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-201904:10:29 IST Report Abuse
J.V. Iyer நாட்டில் நல்லது நடந்தால் வாழ்த்துவோம்.அதிர்ச்சி என்பது தமிழ் நாட்டை கெடுத்தவர்களுக்கும், கெடுக்க நினைப்பவர்களுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-201923:17:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆம்டீம்க்காவுக்கு சொம்படிக்க வேண்டியிருக்கென்னு நரி ஒண்ணு நீலிக்கண்ணீர் வடிக்க அதுக்கு சிம்பன்சி ஒண்ணு ஏன் அடிக்கக்கூடாதுன்னு குட்டிக்கரணம் அடிக்க அந்த நரி கல்வித்துறை சிறப்பா வேலை செய்யுதுன்னு சந்தோஷப்படுது. கீழே படிங்க.. இது அவங்க கூட்டணி கட்சி பட்டியல் போட்ட ஊழல். குற்றச்சாட்டு 15 - கல்வித்துறை நியமனத்தில் ஊழல் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ரூ. 500 கோடி லஞ்சம்... பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.. இது லிஸ்ட் போட்டு ரெண்டு வருஷம் ஆயிடிச்சு. அதுக்கப்புறம் நடந்த நிர்மலா ஊழல், புது மெடிக்கல் காலேஜ் நடத்த போட்ட அரசாணை, அதில் நடந்த 500 கோடி ஊழல் எல்லாம் இன்னும் டாக்டர் ராமதாஸர் இன்னும் வெளியே உடல்லை..
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
10-டிச-201909:20:26 IST Report Abuse
மூல பத்திரம் அது சரி மூல பாத்திரம் எங்கே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X