சிங்கர் சுபிக்ஷா

Added : டிச 08, 2019
Share
Advertisement
சிங்கர் சுபிக்ஷா

இவள் இருப்பது இசையும் இசை சார்ந்த இடமும்... இவள் நடப்பது ஸ்வரமும் ஸ்வரம் சார்ந்த தடமும்... இவளை நேசிப்பது வீணையும் வீணை சார்ந்த கம்பிகளும், இவளை சுவாசிப்பது பாடலும் பாடல் சார்ந்த வரிகளும், இவளை அழைப்பது குயிலும் குயில் சார்ந்த குரலும், இவளை ஈர்ப்பது போட்டிகளும் போட்டி சார்ந்த மேடைகளும்... என இசை மழையாய் பாராட்ட துாண்டும் மதுரையின் சிங்கர் சுபிக்ஷா மனம் திறக்கிறார்...
* இனிக்கும் குரலிசை குயிலின் அறிமுகம் என்னவோ ?
பொறியியல் படிக்கிறேன், சின்ன வயசில் தாத்தா, பாட்டி பாடுவதை கேட்டு வளர்ந்ததால் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றேன். பள்ளி இசை நிகழ்வுகளில் பாடிய அனுபவமும் என்னை சிங்கராக மாற்றியது.

* முதன் முதலில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டி ?மதுரை லோக்கல் சேனல் ஒன்றில் 'ஸ்டார் சிங்கர்' போட்டியில் செலக்டாகி 'ரசிக்கும் சீமானே' பாடலை பாடினேன். நடுவர்கள் குரல், பாவனை, பாடிய விதம் எல்லாம் பார்த்து முதல் பரிசு கொடுத்தாங்க. இது தான் என் முதல் மேடை, முதல் போட்டி.

* 'டிவி' பாட்டு போட்டியில் பங்கேற்று பாடியது குறித்து?ஏ.ஆர்.ரஹ்மான் மேடை இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக நடந்த போட்டியில் பங்கேற்றேன். அதற்கு பின் 'டிவி' பாட்டு போட்டியில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை பண்பலை ரேடியோ நடத்திய போட்டியிலும் பாடி வெற்றி பெற்றேன்.

* மேடைகளில் நீங்கள் விரும்பி பாடும் சினிமா பாடல் ?இப்பெல்லாம் பெண் பாடகிகள் 'போல்ட் வாய்ஸ்'ல் பாடும் பாடல்கள் தான் அதிகம் வருது. என் குரல் கூட 'போல்டு' பாட்டுக்கு பொருத்தமா இருந்தது. அதனால், மேடைகளில் 'திருடா திருடா' படத்தில் சிங்கர் அனுபமா பாடிய 'சந்திரலேக்கா' பாடலை தான் விரும்பி பாடுகிறேன்.

* மேடை, போட்டிகளில் மட்டும் தான் பாடுவீர்களா ?இல்லை, 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்', 'காவிதழ்' ஆல்பங்களில் பாடி இருக்கிறேன். மதுரையின் 'லெவல்ஸ் ஆப் சிக்ஸ் ஸ்ட்ரிங்ஸ்' மியூசிக் பேண்டிலும் பாடுறேன்.

* சமூக வலைதளங்கள், ஸ்மூல் ஆப்பில் பாடுவது உண்டா?என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்று பாடல்களை பாடி பதிவேற்றி வருகிறேன். 'ஸ்மூல் ஆப்' ல் பாடும் போது முழு திறமையை வெளிப்படுத்த முடியலைங்குறது என் கருத்து.

* உங்கள் பாடல் திறமையை பாராட்டிய இசை பிரபலங்கள் ?பின்னணி பாடகர் கார்த்தி பாராட்டி இருக்கார். அவர் கூட பாடும் போது தப்பா பாடினால் கூட கற்றுத் தருவார். டிப்ஸ் எல்லாம் கூட நிறைய கொடுப்பார். முன்னணி பாடகர்களிடம் இருந்து தினமும் ஒரு விஷயத்தை கற்றுக்கிறேன்.

* நீங்கள் பின்னணி பாட விரும்பும் தமிழ் இசை இயக்குனர்கள்?சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன்... என பெரிய லிஸ்ட் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் காலேஜ்ல படிப்பது தான் என் கனவு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X