140 சட்ட விரோத தொழிற்சாலைகள்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






டில்லியில் ராணி ஜான்சி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகிய பகுதியாகவும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவும் இருந்தது. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, உள்ள பகுதியில் சாலைகள் மிகவும் குறுகியதாக இருந்தது.
இதனால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியில்லை. இந்த பகுதிகளில் சட்டவிரோதமாக, அரசின் அனுமதி பெறாமல், 140 தொழிற்சாலைகள் செயல்படுவதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
காங்., கட்சியும் தற்போது விபத்துக்கு ஆம்ஆத்மி அரசே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டியுள்ளது.






கடந்தகால விபத்துகள்


அதேநேரத்தில் டில்லியில், தீவிபத்து ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்துகள்:

2019 பிப்.,: டில்லியில் மத்திய பகுதியில் இருக்கும் கரோல் பாக் பகுதியில் உள்ள ஓட்டலில் 17 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
2018 பிப்.,: கரோல் பாக் பகுதியில உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.
2018 மே: தெற்கு டில்லியில் மால்வியா நகரில் உள்ள குடோவுனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
ஏப்ரல் 2018: டில்லியின் வடமேற்கு பகுதியில் ,குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஜன.,2018: டில்லியின் பவனா பகுதியில் இருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பெண்கள் உட்பட 17 பேர்உயிரிழந்தனர்.
2011நவ.,: டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள நந் நகரி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
1999 மே: பழைய டில்லியின் லால் கவுன் பகுதியில் உள்ள கெமிக்கல் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 57 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
1997 ஜூன்: உபஹார் சினிமா அரங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-டிச-201900:15:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதேநேரத்தில் டில்லியில், தீவிபத்து ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்துகள்:... ஒவ்வொருமுறையும் "அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள்" ன்னு தான் அறிக்கை, "நிர்வாகத்துக்கு தெரியவே தெரியாது" ன்னு வந்திருக்குமே. நாடு முழுவதும் ஒரே வாசகம் தான்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-டிச-201920:15:46 IST Report Abuse
தாண்டவக்கோன் //1, 2, ....138, 139, 140// ஏண்டா, அஞ்ஜர வருசமா எண்ணிக்கிட்டுதான் இருக்கீங்களாடா
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
08-டிச-201917:56:23 IST Report Abuse
Balaji அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதெற்கெல்லாம் முக்கிய காரணம்...... அலட்சியம் எப்படி வருகிறது லஞ்சத்தினால்....... இது அங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் அப்படித்தான்........ அரசு அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு முறையற்ற அணுமைதியை வழங்கிவிடுகிறார்கள்......... விளைவு அப்பாவிகளின் உயிர்....... இன்று வரை தவறான அனுமயளித்ததாக யாவரும் தண்டிக்கப்படாததும் இதற்கு முக்கிய காரணம்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X