தவறு செய்தால் இனி என்கவுன்டர்: தெலுங்கானா அமைச்சர் எச்சரிக்கை

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (27)
Advertisement
Telangana, wrong, cruel, encounter,  minister, தெலுங்கானா, என்கவுன்டர், அமைச்சர்,

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் இனிமேல் என்கவுன்டர் தான் என தெலுங்கானா மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானாவில், ஷ்சாபாத் சுங்கச்சாவடி அருகே, கால்நடை பெண் டாக்டரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள், விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில் 4 பேர் பலியானார்கள். இது தொடர்பாக, பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இது ஒரு பாடம். இனி நீங்கள் யாரேனும், தவறு செய்தால், நீதிமன்ற விசாரணை காரணமாக சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்க முடியாது. சிறை செல்லவும் பின் பிணையில் வெளியில் வந்து வழக்கை இழுத்தடிக்கவும் முடியாது.

அது போன்று இனி எதுவும் நடக்காது. இந்த என்கவுன்டர் மூலம் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால், என்கவுன்டர் தான் என்ற எச்சரிக்கை கருத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெலுங்கானா அரசாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை,இது, வெறும் நலத்திட்டங்கள் மூலம், மட்டும் நாங்கள் முன்மாதிரியாக நிற்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், ஏற்படுத்தியுள்ள இத்தகைய நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர், தனது கருத்து தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
09-டிச-201906:48:11 IST Report Abuse
Arivu இது ரொம்ப ஓவரா தெரியவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
09-டிச-201901:11:45 IST Report Abuse
.Dr.A.Joseph இஷ்டத்துக்கு சிட்டுக் குருவிகளை சுட்டுக் கொல்வதுபோல மனிதர்களை சுட்டு கொல்லமுடியாது.உயிர் உள்ளவரை சிறையில் காலம் தள்ளுவது தினம் தினம் சாவதற்கு சமம். ஒருவேளை இறந்தவர் நிரபராதி என பின்னாளில் தெரிய வந்தால் மீண்டும் உயிரை கொண்டுவர முடியுமா? சிறைகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஜோடிக்கப்பட்டு பணத்தாலும் ,அதிகாரத்தாலும் மீளமுடியாதவர்களாக இருப்பர்.சமீபகாலமாக போலீஸ்காரன் சினிமாக்காரன் போல மீடியாக்களில் பதிவிடுகிறான்.உயிர்களை எடுப்பது ஏற்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-டிச-201922:10:58 IST Report Abuse
Rafi ஒரு அமைச்சர் சட்டத்தை கடைபிடிக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அதை மீறுவது போல் பேசுவது கண்டிக்க தக்கது. ஏற்கனவே குஜராத்தில் அரசியல் செய்வதற்காக போலி என்கவுண்டர் நடத்தி அதிலிருந்து தப்பிக்க ஒருவர் தில்லுமுல்லுகள் பல செய்து தப்பித்தது நினைவில் வருகின்றது. இஸ்லாமிய நாடுகளில் நடப்பது போல் விரைந்து விசாரணையை நடத்தி முறைப்படி தண்டனையை கடுமையாக்கி நிறைவேற்ற முன்வாருங்கள்.சட்டத்தை மீறாதீர்கள்.
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
09-டிச-201904:09:51 IST Report Abuse
Milirvanசவூதி ஷரியா சட்டப்படி சாலை விபத்தில் ஒரு சவூதிக்காரர் இறந்தால் விபத்துக்கு காரணமானவர் கொடுக்க வேண்டிய பணம் அதிகம் என்றும், அடுத்தபடியாக மற்ற முஸ்லீம் இறப்புக்கு அதிகம் என்றும், பிறகு கிறித்துவர்களுக்காகவும், மிக குறைவாக ஹிந்துக்களின் உயிருக்கு பணம் என்றும் கேள்விப்பட்டேன்.. நிஜம்தானா சார்..??...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-டிச-201905:20:43 IST Report Abuse
கதிரழகன், SSLCஅரபி அரபி அடிமையா கொன்னாலும் சரி, காபிரை கொன்னாலும் சரி, அதிக தண்டனை கெடையாது, ரொம்ப மோசமா இருந்தா இழப்பீடு கொடுப்பாக அம்புடுதேன். ஆனா காபிரோ அடிமையோ அரேபிய கொன்னா, தலையை வெட்டிடுவான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X