பொது செய்தி

தமிழ்நாடு

மணமக்களுக்கு வெங்காயத்தில் பொக்கே கொடுத்த நண்பர்கள்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (22)
Advertisement
திருமணம், வெங்காயம், பொக்கே, பரிசு

இந்த செய்தியை கேட்க

கடலூர்: வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில், கடலூரில் நடந்த திருமணத்தில், மணமக்களுக்கு, நண்பர்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட பொக்கேவை பரிசாக வழங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உற்பத்தி குறைவு, தேவை அதிகம் காரணமாக, வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ எட்டி உள்ளது. இதனால், வெங்காயத்தை திருடும் சம்பவமும், பிடிபடுபவர்களை தாக்கும் சம்பவமும் நடக்கின்றன. வெங்காய விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில், பல மீம்ஸ்கள் வெளிவருகின்றன. வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.




இந்நிலையில், கடலூரில் இன்று(டிச.,8) சாகுல் - சப்ரினா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. அவர்களது நண்பர்கள், மணமக்களுக்கு, வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையிலும் வெங்காயத்தில் பொக்கே செய்து, அதனை பரிசாக கொடுத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
11-டிச-201915:02:29 IST Report Abuse
sankar தலையில் உள்ளதா பாத்தா தெரியலையா - இவங்க அவங்கதான்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-டிச-201908:42:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடைசீ பீத்தல் வெங்காயம் இதைவெச்சுண்டு என்னமா கலாய்கிறாங்க முஸ்லீம் வீட்டு நிக்காஹ் அவாளுக்கு வெங்காயமின்றி சமைக்கவேதெரியாது உருப்படியான பரிசு
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201906:18:52 IST Report Abuse
ருத்ரா நாடில் அதயாவசிய தேவைகள்விலை உயர்வை இதை விட அழகாய் கேலியாக்க முடியாது. இத்தகைய பரிசை ஏழைகளுக்கு தரலாம். அனேகமாக இட்லி, சட்னி பழைய சோறு பச்ச மொளகா வெங்காயம் சாப்பிடும் வர்க்கத்தினர்தான் அதிகம். anyway மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X