11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில், தனது உயிரை பற்றி கவலைப்படாமல், விரைந்து செயல்பட்டு 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரரை பலரும் பாராட்டி வருகின்றனர்.latest tamil newsடில்லி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 30 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் ராஜேஷ் சுக்லா என்ற வீரர், முதன்முதலில் தொழிற்சாலைக்குள் விரைவாக நுழைந்து, அங்கிருந்தவர்களை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.
இவ்வாறு அவர், ஒருவர் பின் ஒருவராக 11 பேரை காப்பாற்றினார். இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும், அதனை பற்றி கவலைப்படாமல், அங்கு சிக்கியிருந்தவர்களின் உயிரை காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்தார். இதேபோல், பல தீயணைப்பு வீரர்களும், தீவிபத்தில் சிக்கி மயக்கமடைந்தவர்களை தங்களது முதுகில் தூக்கி கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டிருக்காவிட்டால், உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil newsகாயமடைந்த தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை டில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா உண்மையான கதாநாயகன். அவர் தான் முதலில் தொழிற்சாலைக்குள் நுழைந்து, 11 பேரின் உயிரை காப்பாற்றினார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதனை பற்றி கவலைப்படாமல், தனது பணியை சிறப்பாக செய்தார். அவருக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-டிச-201911:20:44 IST Report Abuse
ganapati sb தனது கடமையை திறம்பட செய்து பல உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-டிச-201905:46:18 IST Report Abuse
Pannadai Pandian Morning 5 am fire accident happened to douse the fire it took 5 more hours.....why ? is this our efficiency ???
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-டிச-201900:13:17 IST Report Abuse
Vena Suna ஆஹா..அருமை...வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X