அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை: கமல்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (24)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் அறிவித்துள்ளார். மேலும் 2021 ல் ஆட்சியை பிடிப்பதே குறிக்கோள் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் பங்கு பெறுவதால் சொற்பமான முன்னேற்றமே கிட்டும். மாற்றத்தை லட்சியாக கொண்டுள்ள மக்கள் நீதி மையம் அதை தவறை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்த சாதனையும் இல்லை. மக்கள் நீதி மையத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல, நேர்மையும் மக்கள் பலமுமே.

இந்த தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டு கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப் படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சி தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே பிரகடனமாக இருக்க வேண்டும். இதுனே என் ஆசையும் அறிவுரையுமாகும்.

வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலன் பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப் போகும் நம் வெற்றிகொடியே தமிழகத்தின் அன்னக் கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-டிச-201919:44:23 IST Report Abuse
bal ஏற்கனவே டெபாசிட் காலியானதால் இந்த தேர்தலில் டெபாசிட் வழங்க முடியவில்லைபோலும்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
09-டிச-201916:21:27 IST Report Abuse
konanki இடைத்தேர்தல் ,பஞ்சாயத்து தேர்தல் எதிலும் போட்டி போட மாட்டோம் . ஆனால் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகணும் . ஏன்னா நாங்க தான் தமிழ் நாட்டிலேயே ஒரிஜினல் அக்மார்க் புத்திசாலி
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-டிச-201900:11:38 IST Report Abuse
Vena Suna தோல்வியை மறுபடியும் சந்திக்க திராணி இல்லை என்று சொல்லி இருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X