டில்லி தொழிற்சாலை அதிபர் கைது

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேரை காவு வாங்கிய தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.






டில்லியில் இன்று காலை ஏற்பட்ட தொழிற்சாலை விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் காயமுற்றுள்ளனர். இந்த சம்பவம் தலைநகரை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் முறையான அனுமதி இந்த தொழிற்சாலைக்கு வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. மேலும் இங்கு தீயணைப்பு தொடர்பான எவ்வித சாதனங்களும் இல்லை என்றும் தெரிகிறது.





இதனையடுத்து விபத்துக்கு காரணமான அதிபர் ரேகன் என்பவர் தலைமறைவானார். இவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை ரேகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-டிச-201916:41:20 IST Report Abuse
மலரின் மகள் தீபாவளி பொங்கல் என்று எந்த பண்டிகை வந்தாலும் காதற் தினம் புத்தாண்டு என்று புதியதாக விழாக்களை துவங்கினாலும் மாமூல் மறக்காமல் வாங்கும் பல்வேறு அரசு துறை சார்ந்த நிருவத்தினருக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வருமுன் காத்திருக்கவேண்டிய அரசின் பல்வேறு துறையினருக்கு நகரின் முக்கிய பகுதியில் செயல் படும் தொழிற்சாலை பற்றி தெரியவே தெரியவில்லை. பல வருடங்களாக அவர்களுக்கு தெரியாமலே இருந்ததா? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள். அவர்களின் கண்காணிப்பை மீறி இந்த வெளிப்படையான தொழிற்சாலை இயங்கியதா? கைப்புண்ணை கண்ணாடியில் பார்ர்த்தும் மைக்ரோஸ்க்கோப் பில் பார்த்து அவர்களுக்கு தெரியவில்லை என்கிறீர்களா? அப்படி என்றால் அவர்கள் எதற்கு அந்த வேலையில். அவர்களையும் சேர்த்தல்லவா தண்டிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு அரசின் கையில் தான் என்பதை ஒவ்வொரு அரசு ஊழியரும் உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-டிச-201913:02:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டில்லி போலீஸ் டில்லி மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறையின் கீழ் இயங்குகிறது.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
09-டிச-201921:08:15 IST Report Abuse
s.rajagopalanகெஜ்ரிவால் கூட இதை சொல்லவில்லை. நீங்கள் அழையா விருந்தாளியாக என் மூக்கை நுழைக்கிறீர்கள் ?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-டிச-201904:04:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஏன் ஒனக்கு எங்கே எரியுது?...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-டிச-201900:02:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இந்நிலையில் முறையான அனுமதி இந்த தொழிற்சாலைக்கு வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. // - பெரும் விபத்துக்களில் கூறப்படும் ஒரே வாசகம், அது அடுக்கு மாடி வளாகம் இடிந்து விழுந்து 20 பேர் புதைந்தாலும் சரி, இல்லை கருங்கல் சுவர் இடிந்து 17 பேர் இறந்தாலும் சரி, இல்லை தொழிற்சாலை தீப்பிடித்து 43 பேர் கருகினாலும் சரி. அனுமதி வழங்கப்படவில்லை என்ற ஒரே வாசகம் தான் ஊழலின் உச்சாணியில் உழலும் இந்தியாவில். சிறப்பு அரசாணை போட்டு அனுமதித்த அடுக்குமாடி கட்டிடம், 20 வருடங்களாக புகாரளித்தும் தூங்கி கொண்டிருந்த ஊழல் நா-தாரிகள், பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கும் "தொழிற்சாலை". விபத்து நடந்ததும் கையை விரிக்கும் லஞ்ச நா-ய்கள். ஊழலை பற்றி கவலைப்படாமல் ஆட்சியில் ஒட்டி நிற்க நாட்களை வீணாக்கும் அரசியல்வியாதிகள், நாட்டின் முதல் பதவியில் இருப்பவர் முதல் கடைக்கோடி அரசு கீழ்நிலை ஊழியர்கள் வரை. லஞ்சம், லஞ்சம், லஞ்சம். குற்றவாளிகளை தண்டிக்க என்கவுண்டர். ஆனால் அதே போலீஸ் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்காமல் கொலை செய்ய வைத்த கொடூரம். காரணம், இரண்டிலும் லஞ்சபோலீஸின் கையாலாகாத்தனத்தின் பிரதிபலிப்பு. ஜாதி, மதம் என்று பிரித்து ஆளும் நா-ய்-கள். கேள்வி கேட்பவர்களை ஆன்டி இந்தியனென்றும், அர்பன் நக்சலைட் என்றும் கொள்ளக்கூட தயங்காகாத மிருகக்கூடம், அதை வளர்க்கும் அரசியலமைப்பு. நல்லா சாவுங்க..
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-டிச-201911:04:09 IST Report Abuse
Malick Rajaஇப்படித்தான் இந்தியா மிளிர்கிறது . மேக்கின் இந்தியா மின்னுகிறது .தொழில் துறை வளர்ச்சி வளைகிறது .. கண்காணிப்போ கண்மூடிவிட்டது .. எனவே இதுபோன்று நடப்பதும் பின்னர் தொழிற்சாலை அனுமதியற்று நடப்பதும் ..மக்கள் கருகி சாவதும் இயல்பாகத்தானே இருக்க முடியும் .. ஒரு நகரத்தில் ஒருதொழிற்சாலை அனுமதியற்று நடக்கிறது அதிலும் மத்திய அரசின் கண்காணிப்பில் காவல்துறை . அப்புறம் என்ன புரிந்துகொள்ளவேண்டியதுதானே ஆளுமையின் திறமையின்மையை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X