அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (32)
Advertisement
dmk,Stalin,திமுக,ஸ்டாலின்,தீர்மானம்,உள்ளாட்சி தேர்தல்,கோர்ட்,நீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும் ஸ்டாலினின் முடிவு, திமுக கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக., ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை, தி.நகர் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நேரெதிர் சந்திக்க தயார்:


கூட்டத்தில், தேர்தலை நேரெதிரே சந்தித்து புதிய சரித்திரம் படைக்க தயாராக உள்ளதாக, திமுக, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் அனைத்து கட்சிகளுக்கும், தேர்தல் காலத்தில் சமவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.






ஸ்டாலினின் முடிவே..


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் கருத்தும் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. மேலும், தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, தேர்தல் வேண்டாம் என சொல்லவில்லை; சட்டப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் சொல்கிறோம் என கூறியுள்ளது. மேலும், தேர்தல் எப்படியாவது தடைபட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-டிச-201919:43:38 IST Report Abuse
bal தேர்தல் வேணும்னு சொன்னேங்க...இப்போ என்ன...திருட்டுப்பயலுங்க..
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201910:33:00 IST Report Abuse
நக்கல் இது என்ன அநியாயம்.. சீடம்பரம் உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி பெயில் வாங்கி ஊர் சுற்றுகிறார்... தீயமுக நினைத்தால் வழக்கு போட்டு தேர்தலை தள்ளி போடுகிறது... நிர்பயா கேஸ் குற்றவாளிகள் இன்னும் சாகவில்லை... இதெல்லாம் என்ன மாதிரி நீதி என்று தெரியவில்லை....
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201910:05:33 IST Report Abuse
செய்யாறு மு. கருணாகரன் தேர்தல் அறிவிப்பு வந்தால் தேர்தலை சந்திக்கவேண்டுமே தவிர பயப்படவே கூடாது , எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நடுவது கழகத்திற்கு இருக்கும் நல்ல பெயர் மக்கள் மத்தியில் குறைய வாய்ப்புள்ளது ,ஆகவே துணிவுடன் தேர்தலை எதிர்கொள்ளவும் . நன்றி வணக்கம் .
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-டிச-201913:30:47 IST Report Abuse
வல்வில் ஓரி கழகத்துக்கு நல்ல பெயரா...இது எந்த ஊர்ல..? ஹா ஹா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X