அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு பயம்: முதல்வர்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (25)
Advertisement
EPS,முதல்வர்,பழனிசாமி,D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

கோவை: 'தேர்தலை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார்' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாவது: உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை, தமிழக மக்களுக்கு ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் கோர்ட்டுக்கு அவர் செல்கிறார்.





தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் அவரது திட்டம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துள்ளது. மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் நினைக்கிறார். தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து கூறிக்கொண்டே தான் இருக்கிறார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்.


வெங்காய விலை குறையும்:


வரத்து குறைவால், தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளது. தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால், 20 நாட்களில் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-டிச-201903:23:04 IST Report Abuse
meenakshisundaram பொட்டப்பிள்ளையை துரத்தினவனும் தொல்லை கொடுத்தவனும் கைதானார்கள் இப்போதுள்ள உலகத்திலே, நாட்டு விடுதலைக்கென போராடினவனும்கூட சிறைக்கு சென்றுள்ளான் ,அதே நேரத்தில் பொருளாதாரக்குற்றங்களுக்காகவும் கைதானவர்கள் உண்டு.ஆனா வித்தியாசம் -விடுதலைக்கு போராடி சிறை சென்றவன் கை விரல்களை தூக்கி வெற்றி சின்னத்தை காட்டினதில்லை அன்று,இன்றோ?
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
09-டிச-201911:16:45 IST Report Abuse
Jai Hinth ஒட்டு மெசினை பார்த்தாலே எல்லாருக்கும் பயம் . சீட்டு முறை பயம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-டிச-201908:40:36 IST Report Abuse
வல்வில் ஓரி மூலபத்ரம் எங்கே ? ஓஓ ஸாரி .. இது டாக்டர் எடப்பாடியா? .. நான் தப்பா நெனச்சுட்டேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X