சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கத்தியால் குத்திய போலீஸ் கைது

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement

திருநெல்வேலி: கடையத்தில் காவல் நிலையம் அருகே பெண் ஒருவரை, போலீஸ் தட்சிணாமூர்த்தி கத்தியால் குத்தினார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 33. வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக உள்ளார். இவர் இதற்கு முன்பு கடையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியுள்ளார். அப்போது ஸ்டேஷனுக்கு எதிரே வசிக்கும் முப்பிடாதிசக்தி 31 என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.முப்பிடாதிசக்தி, கணவரை பிரிந்து வாழ்பவர். நேற்று அம்பாசமுத்திரத்தில் தட்சிணாமூர்த்தி வீட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார்.
அப்போது முப்பிடாதிசக்தி, போனில் அழைத்த போது தட்சிணாமூர்த்தியின் மனைவி பேசியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பின்னர் தட்சிணாமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற தட்சிணாமூர்த்தி நேற்று இரவு 7:30 மணியளவில் கடையம் சென்றார்.

வீட்டில் இருந்த முப்பிடாதிசக்தியிடம் பேசியபோது தகராறு ஏற்பட்டது. அங்கு கிடந்த கத்தியால் அவரது தலையிலும் காதிலும் குத்தினார். படுகாயமுற்ற முப்பிடாதிசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ்காரர் தட்சிணாமூர்த்தி மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
09-டிச-201909:55:13 IST Report Abuse
Krishna EncounterHimShowNoBiasForPolice
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-201922:38:25 IST Report Abuse
Lion Drsekar இந்த ஒரு செய்தி ஏதோ வெளியே வந்து விட்டது, பாவம் பல குடும்பங்கள் மந்திரவாதிகள், சூனியக்காரர்கள், ஜோஸ்யக்காரர்கள் , இவர்களைப்பிரிப்பதையே முழுநேர தொழிலாகக் கொண்டவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம், அந்த அளவுக்கு கணக்கிலடங்கா குடும்பங்கள் வெளிவரமுடியாமல் எட்டுக்கால் பூச்சி வலையில் அகப்பட்ட பூச்சிபோல் தினம் தினம் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X