'காந்தியை வெல்லும் ஜின்னா சித்தாந்தம்'

Updated : டிச 09, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி: 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால், பாக்.,கின் ஹிந்துத்துவா பதிப்பாக இந்தியா மாறும். மஹாத்மா காந்தியின் சித்தாந்தத்தை ஜின்னா வென்றதாக அமைந்துவிடும்' என, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருர் விமர்சித்துள்ளார்.






அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள, ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை, மத்திய அரசு இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளது.

இது குறித்து, காங்., மூத்த தலைவர் சசி தரூர் கூறியதாவது: தேசிய அகதிகள் கொள்கை குறித்த தனிநபர் மசோதாவை பார்லி.,யில் நான் தாக்கல் செய்தேன். ஆனால், அது குறித்து விவாதிக்க, பா.ஜ., அரசு தயாராக இல்லை. இந்நிலையில், அகதிகள் பிரச்னையில் புதிய முடிவை எடுத்துள்ளனர்.இது, அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கிறேன். நாட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பதே, அரசின் நோக்கமாக உள்ளது. அரசின் இந்த முயற்சி, பாக்., கின் ஹிந்துத்துவா பதிப்பாக இந்தியாவை மாற்றி விடும்.





ஜாதி, மதம், இன பாகுபாடு இல்லாத, சமத்துவம் என்ற நம் அரசியல் சாசனத்தின் முக்கிய கோட்பாடுக்கு எதிரானது இந்த முயற்சி. நாடு சுதந்திரம் பெற்றபோது, மதத்தின் அடிப்படையில் நாடு அமைய வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இருந்த ஜின்னாவால் உருவாக்கப்பட்டதுதான் பாக்., என்ற நாடு. அதே நேரத்தில், மஹாத்மா காந்தி, நேரு, மவுலானா அப்துல் கலாம், அம்பேத்கர் ஆகியோர், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.





தற்போது மத்திய அரசின் முயற்சி, காந்தியின் சித்தாந்தத்தை ஜின்னாவின் சித்தாந்தம் வெல்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.இந்த மசோதா பார்லி.,யில் நிறைவேறினாலும், நம் நீதித் துறை அதற்கு அனுமதி அளிக்காது என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-201900:10:22 IST Report Abuse
Rajagopal இவன் பாகிஸ்தானின் ISI-இன் கொக்கிக் பிடியில் இருக்கிறான். ஒரு பாகிஸ்தானியப் பெண்ணோடு இவனுக்குத் தொடர்பு இருந்தது. அவனை காதல் வலையில் (Honey trap) சிக்க வைத்து பிளாக்மெயில் செய்திருக்கிறார்கள். அதிலிருந்து விடு பட முயற்சி செய்த போது, மனைவியைக் கொன்று போட்டு, பழி இவன் மேல் வரும் படி செய்து இருக்கிறார்கள். மாட்டிக்கொண்டு திண்டாடுகிறான் இப்போது. இதை வெளியில் நிரூபணம் செய்ய இயலாது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகள் பெண்களை வைத்துப் பல பெரிய புள்ளிகளை இந்த மாதிரிக் கயிற்றில் ஆட விடுவது உண்டு.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-டிச-201919:42:24 IST Report Abuse
bal பெண்டாட்டியை கொன்னவன் இவன்..பேச்சு ஒரு கேடா..மக்கள் இவனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201913:26:37 IST Report Abuse
Ganesan Madurai காங்கிரஸ் வெளிப்படையாகவே தங்கள் இஸ்லாமிய தேசம் இந்தியாவில் உருவாகுவதையே ஆதரிப்பதாதாக சொல்லலாமே. ஏன் பல பொய்களை கூறி மக்களை ஏமாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X