பொது செய்தி

இந்தியா

ஷிவம் துபே அதிரடி; 170 ரன் குவித்தது இந்தியா

Added : டிச 08, 2019
Share
Advertisement
India,இந்தியா,IndvWI2ndT20I,IndvWI,India,Windies,batting

திருவனந்தபுரம்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் ஷிவம் துபே அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. விண்டீஸ் அணியில் தினேஷ் ராம்தின் நீக்கப்பட்டு நிக்கோலஸ் பூரன் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


துபே விளாசல்


இந்திய அணிக்கு ரோகித் சர்மா (15), லோகேஷ் ராகுல் (11) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. போலார்டு வீசிய 9வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்ட ஷிவம் துபே (54), சர்வதேச அரங்கில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். கேப்டன் விராத் கோஹ்லி (19), ஸ்ரேயாஸ் ஐயர் (10), ரவிந்திர ஜடேஜா (9) நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 'டக்-அவுட்' ஆனார்.

இந்திய அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் (33), தீபக் சகார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் அணி சார்பில் வில்லியம்ஸ், வால்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X