அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயரப்போகிறது ஜி.எஸ்.டி., எச்சரிக்கிறார் சிதம்பரம்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 உயரப்போகிறது ஜி.எஸ்.டி., எச்சரிக்கிறார் சிதம்பரம்

திருச்சி: ''அனைத்து, ஜி.எஸ்.டி.,வரியையும் உயர்த்த போகின்றனர். 8 சதவீதம், 12 ஆகவும், 12 சதவீதத்தை, 18 ஆகவும் உயர்த்தி, அனைத்து தரப்பினர் மீதும் வரிச்சுமையை ஏற்படுத்த உள்ளனர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், டில்லி திஹார் சிறையில் இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஜாமினில் வந்துள்ளார்.தன் சொந்த ஊரான சிவகங்கை செல்வதற்காக, நேற்று திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை, காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவை, காங்கிரஸ் தலைமை அறிவிக்கும். இந்தியாவுக்கு யார் அகதியாக வந்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க, முழுமையான சட்டம் அவசியம்.அதற்கு பதிலாக, குடியுரிமை சட்டம் கொண்டு வந்தால், மத அடிப்படையில் பாகுபாடும், குழப்பமும் ஏற்படும். நாட்டின் பொருளாதாரம் மிகவும் தாழ்ந்திருப்பதாக, நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நிதானமாகவே சொல்கிறேன்; மிக மோசமான நிலையில் உள்ளது.ரயில்வே துறையை தனியார் மயமாக்க, நீண்ட நாட்களாகும். அதுவரை, பா.ஜ., ஆட்சி இருக்காது. ரிசர்வ் வங்கியை மிரட்டி, 1.50 லட்சம் கோடி ரூபாயை வாங்கி, கார்ப்பரேட் முதலாளிகளின் வரியை தள்ளுபடி செய்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையை நிரப்ப, அடுத்த கூட்டத்தில், அனைத்து, ஜி.எஸ்.டி.,வரியையும் உயர்த்தப் போகின்றனர். 8 சதவீதம், 12 ஆகவும், 12 சதவீதத்தை, 18 ஆகவும் உயர்த்தி, அனைத்து தரப்பினர் மீதும் வரிச்சுமையை ஏற்படுத்த உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

வெங்காய மாலை
சிதம்பரத்தை வரவேற்க, காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர், திருச்சி விமான நிலையம் வந்திருந்தனர். அவர்கள், மாலை மற்றும் சால்வைகளுடன் காத்திருந்த போது, பெரம்பலுார் மாவட்ட காங்., செயலர் ராஜிவ்காந்தி, 42, பெரிய வெங்காயங்களை மாலையாக கட்டி எடுத்து வந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
09-டிச-201921:05:37 IST Report Abuse
unmaitamil வந்துட்டாரு குடுகுடுப்பைக்காரன். எதாவது உளறிக்கிட்டே இருக்கனும் இந்த உளறுவாயனுக்கு. பேசாம விட்டுலபோய் உட்காரு. இருக்க மரியாதையும் போகப்போவுது ??
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
09-டிச-201920:00:58 IST Report Abuse
karutthu வெளியில் வந்தவுடன் ஆள் எவ்வளவு தெளிவாகிவிட்டான் பாருங்கள் .நடிப்பில் சிவாஜிகணேசனையே மிஞ்சிட்டான் . மறுபடியும் மக்களை குழப்ப ஆரம்பித்துவிட்டான் .
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
09-டிச-201915:46:42 IST Report Abuse
s.rajagopalan இந்த வெத்து பேச்செல்லாம் கேட்டாங்க ? 'அங்கே ' வச்சிருக்கீங்களே அதை கஜானாவில் சேருங்கள். பிறகு பேசுங்கள் இன்னாமா சமாளிக்க பாக்கிறீங்க ஈடுபடாதுங்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X