பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., உயர்வுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: 'வணிகம் நொடிந்து போயுள்ள நிலையில், மீண்டும், ஜி.எஸ்.டி., வரி உயர்வை அறிவித்திருப்பது, வணிகர்களுக்கும், நாட்டிற்கும் இழைக்கப்படும் அநீதி' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் தவறான கொள்கைகளால், ஆன்லைன் வர்த்தகத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும், வணிகம், விவசாயம், உற்பத்தி என்ற பொருளாதார துாண்கள் சிதைக்கப்பட்டு, நாட்டு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் செல்கின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.8ல் இருந்து, 4.6 சதவீதமாகியுள்ளது. வணிகம் நொடிந்து போயுள்ள நிலையில், மீண்டும் ஜி.எஸ்.டி., வரியில் சீரமைப்பு என, மத்திய அரசு வரி உயர்வை அறிவித்திருப்பது, வணிகர்களுக்கும், நாட்டிற்கும் இழைக்கப்படும் அநீதி.வேளாண் பொருட்கள், உணவக பண்டங்கள் மற்றும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. வரி உயர்வு என்றால், மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களோடு சேர்ந்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் போராடும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள், மக்கள் மீது சுமத்தும் வரி சுமையையும், வணிகர்கள் மீதான ஆன்லைன் மறைமுக தாக்குதலையும், உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு, விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-டிச-201908:37:13 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வாங்கற நாங்களே பொறுத்துக்கிறோம். எங்களிடம் பிடுங்கி வரி கட்டுகிறீர்கள். அரசு 1 % உயர்த்தினால் நீங்கள் 10 % விலை ஏற்றி கொள்ளையடிக்கிறீர்கள் .அதனால் இந்த முதலை கண்ணீர் நடிப்பு வேண்டாம் ராஜா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X