பொது செய்தி

இந்தியா

எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பலத்த பாதுகாப்புடன் உ.பி.,யில் அடக்கம்

Added : டிச 08, 2019
Advertisement
 எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பலத்த பாதுகாப்புடன் உ.பி.,யில் அடக்கம்

உன்னாவ்: உத்தர பிரதேசத்தில், ஐந்து பேர் அடங்கிய கும்பலால், தீ வைத்து எரிக்கப்பட்டு பலியான இளம் பெண்ணின் உடல், பலத்த பாதுகாப்புடன், அவரது சொந்த ஊரில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்தாண்டு டிசம்பரில், இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்
இது குறித்த வழக்கு விசாரணைக்காக, ரேபரேலி நீதிமன்றத்துக்கு, சமீபத்தில் அந்த பெண் சென்றார். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்த இருவருடன், மேலும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து, அந்த பெண்ணை வழிமறித்தனர். அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, தப்பி ஓடினர். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அந்த இளம்பெண், சிகிச்சைக்காக டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் உடல், பலத்த பாதுகாப்புக்கு இடையே, உ.பி., மாநிலம் உன்னாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு இல்லைசமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி., சுனில் சிங் சாஜன் கூறியதாவது:உ.பி.,யில், சட்டம் - ஒழுங்கு மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத யோகி ஆதித்யநாத், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

குடும்பத்தினருக்கு பாதுகாப்புலக்னோ பிராந்திய ஆணையர் முகேஷ் மெஹ்ரம் கூறியதாவது:தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் சகோதரருக்கு, துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமமும் வழங்கப்படும். அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும். அவரது குடும்பத்தினருக்கு, இரண்டு வீடுகள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X