பொது செய்தி

இந்தியா

2வது டி-20; இந்திய அணி தோல்வி

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
India,இந்தியா,IndvWI2ndT20I,IndvWI,India,Windies,batting

திருவனந்தபுரம்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. விண்டீஸ் அணியில் தினேஷ் ராம்தின் நீக்கப்பட்டு நிக்கோலஸ் பூரன் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


துபே விளாசல்


இந்திய அணிக்கு ரோகித் சர்மா (15), லோகேஷ் ராகுல் (11) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. போலார்டு வீசிய 9வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்ட ஷிவம் துபே (54), சர்வதேச அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கேப்டன் விராத் கோஹ்லி (19), ஸ்ரேயாஸ் ஐயர் (10), ரவிந்திர ஜடேஜா (9) நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 'டக்-அவுட்' ஆனார். இந்திய அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் (33), தீபக் சகார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் அணி சார்பில் வில்லியம்ஸ், வால்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


சிம்மன்ஸ் அபாரம்


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (40) நல்ல துவக்கம் தந்தார். ஷிம்ரன் ஹெட்மயர் (23) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். விண்டீஸ் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் (67), பூரன் (38) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து தொடர் 1-1 என, சமநிலை அடைந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கவுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-டிச-201913:22:04 IST Report Abuse
Girija இன்னும் இந்த விளையாட்டின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ளவில்லை ? மும்பை டிக்கெட் விற்க வேண்டுமானால் இங்கு தோற்கவேண்டும். காசு சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், அதிகாலையில் ஒருநாள் போட்டி , மதியம் பகல் இரவு போட்டி என்று கூட ஒரே டீம் வரும் காலத்தில் விளையாடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X