ரூ.50 ஆயிரத்திற்காக காதலி எரித்துக் கொலை

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை தராததால், 17 வயது காதலியை எரித்துக் கொன்ற வாலிபர் மற்றும் அவருடைய தாய் கைது செய்யப்பட்டனர்.


திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள தெற்கு திரிபுரா மாவட்டத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், தினக் கூலியாக வேலை பார்த்து வந்த, அஜய் ருத்ர பால், 21, என்ற வாலிபரை காதலித்து வந்தார். சமீபத்தில், தன் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதையடுத்து, அஜய் ருத்ர பால் குடும்பத்தாருடன், அந்த பெண்ணின் பெற்றோர் பேசியுள்ளனர். திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பலத்த தீக்காயங்களுடன், அந்தப் பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதாக, அஜய் ருத்ர பால் குடும்பத்தார் கூறினர். ஆனால், எரித்துக் கொல்லப்பட்டதாக, பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதையடுத்து, அஜய் ருத்ர பால் மற்றும் அவருடைய தாயை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
09-டிச-201910:06:50 IST Report Abuse
Krishna Actually Girl Was Taken Away For Recovering Loan Money Then Love Marriage LaterT wisted To Dowry Harassment WHAT a Shame Of Media Twist And Sheepish Citisens Believing Media Propagandas To DiVert PeoplesAttentionFromNewsOfIndia'sDestruction
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201909:13:02 IST Report Abuse
ருத்ரா பணத்திற்காகவே காதல்,திருமணம் என்று கதை விடுகிறான். தன் தாயின் யோசனை? யுடன் செயல் பட்டு இருக்கிறான். இது முதல் கொலையா, முன்பும் ஏமாற்றி இருக்கிறானா? விசாரணை செய்து அப்புறம் தெலுங்கானா Style தான்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-டிச-201908:11:46 IST Report Abuse
A.George Alphonse இவர்களும் டெலெங்கான ஸ்டேட் ஸ்டைலில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட வேண்டியவர்களே.கொடூரர்கள்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09-டிச-201914:21:42 IST Report Abuse
Nallavan Nallavanஉங்கள் கருத்தை வரவேற்கிறேன் ..... வழிமொழிகிறேன் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X