அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினி திட்டவட்டம்! கமலின் கட்சியும் போட்டியில்லை

Updated : டிச 09, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (26+ 34)
Advertisement
உள்ளாட்சி தேர்தலில், ரஜினி, கமல்,ஆதரவு இல்லை, போட்டியில்லை, ஊழல் , கட்சி

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' என ரஜினி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தன் புகைப்படம் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன் படுத்தவும் தடை விதித்துள்ளார். அதே நேரத்தில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கு இன்று மனுத்தாக்கல் துவங்குகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த தேர்தலுக்கான 'சீட்' பங்கீடு குறித்து அ.தி.மு.க. - தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.

சமீபத்தில் 'திரைத்துறையில் கமலின் 60 ஆண்டுகள்' தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினி 'தமிழகத்தில் நேற்று நடந்த அற்புதமும் அதிசயமும் நாளையும் நடக்கும். அவற்றை பொதுமக்கள் நிகழ்த்தி காட்டுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரது ரஜினி மக்கள் மன்றம் உள்ளாட்சி தேர்தல் களத்தில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உருவானது. அரசியல் கட்சிகளும் அவரின் ஆதரவை பெறலாமா அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா என்ற ஆலோசனையில் இருந்தன.

இந்நிலையில் 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' என நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் மாநில நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்; ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர்; மன்றத்தின் கொடி; தலைவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கக் கூடாது. மீறி செயல் பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ஏன் என்பது குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் ரஜினி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் விரைவில் அரசியல் கட்சி துவக்க உள்ளார். சட்டசபை தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்படுவார். அப்போது அவரது கட்சியை மையமாக வைத்து தேர்தல் நடக்கும் நிலை வரும். அப்போது தன் ரசிகர்களை களமிறக்குவார். அதனால் தான் லோக்சபா தேர்தலில் ரஜினி எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதே நிலைப்பாட்டையே உள்ளாட்சி தேர்தலிலும் எடுத்துள்ளார்; அவரது முடிவு தான் சரியானது.

இந்த அறிவிப்பை ரஜினி வெளியிடாமல் இருந்திருந்தால் ஆர்வக் கோளாறில் ரஜினி ரசிகர்கள் போட்டியிடுவர். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் ரஜினி துவக்க உள்ள கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும் ரஜினி பெயரை பயன்படுத்தி வெற்றி பெறும் தனிப்பட்ட நபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே தான் முறையாக கட்சி துவங்கி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த பின் தன் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ரஜினி விரும்புகிறார். தற்போது அவரது மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியிடும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் தேசிய அளவில் எதிரொலித்து அதிர வைக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


கமல் கட்சியும் தயக்கம்:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் பங்கு பெறுவதால் கிடைக்கும் முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நீதி மையத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல; நேர்மையும் மக்கள் பலமுமேயாகும்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பங்கீடு குறைவாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள்ளே போட்டுக் கொண்ட வியாபார பங்கீடு மட்டும் அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படாத நிஜம். ஆதலால் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நம் பிரகடனாக இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26+ 34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
09-டிச-201922:51:23 IST Report Abuse
Siva தம்பி ஒழுங்கா இஸ்கூலுக்கு போப்பா... ரோட்டில திரியாதே...
Rate this:
Share this comment
Cancel
prakash - kanchipuram,இந்தியா
09-டிச-201920:22:14 IST Report Abuse
prakash Staright ha America president thaan. rajinikanth & Kamalhasan ku ethachum saaku sollu ullatchi election ku selavu panna koodathu. Vera ethuvum. Illa
Rate this:
Share this comment
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
09-டிச-201919:21:36 IST Report Abuse
Mayavan Mayavan கை கோர்த்த பிக் மற்றும் பிக்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X