சிவசேனாவினர் இரட்டை வேடம்: பட்னவிஸ் மனைவி கடும் தாக்கு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (20)
Advertisement
fadnavis,wife,amruta,shiv sena,BJP,பா.ஜ.,சிவசேனா,அம்ருதா,பட்னாவிஸ்,

மும்பை: ''சிவசேனாவினர் இரட்டை வேடம் போடுபவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்,'' என, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'கார் பார்க்கிங்'இங்குள்ள அவுரங்காபாதில், சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவுக்கு, நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக, 1,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்த போது, மும்பை ஆரே காலனி பகுதியில், 'மெட்ரோ' ரயில் பயணியருக்காக, 'கார் பார்க்கிங்' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அங்கு, மரங்கள் வெட்டப்பட இருந்தன. இதற்கு, சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், ஆரே காலனியில். கார் பார்க்கிங் கட்டுவதற்கு, தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரான, பா.ஜ.,வை சேர்ந்த தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்புஆரே காலனியில் கார் பார்க்கிங் அமைப்பதற்காக, மரங்களை வெட்டுவதற்கு, சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சுற்றுச்சூழலில் அக்கறை உள்ளவர்களாக, தங்களை காட்டிக் கொண்டது. ஆனால், இப்போது, அவுரங்காபாதில், பால் தாக்கரே நினைவிடத்துக்காக, 1,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ன ஆனது; சிவசேனாவினர், இரட்டை வேடம் போடுபவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு, அம்ருதா கூறியுள்ளார்.

இதற்கிடையில், அவுரங்காபாத் மேயர், நந்தகுமார் கோடிலி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பால் தாக்கரே நினைவிடத்துக்காக, மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டோம்' என, கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-டிச-201916:23:04 IST Report Abuse
வெகுளி உதயண்ணா கண்ணில் பட்டுராதீங்க....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-டிச-201910:47:02 IST Report Abuse
Malick Raja ஐயைஏ... சிவசேனா இரட்டை வேடம் போட்டது உண்மை .. பட்நாவிஸ் நால்வர் வேடம் போட்டதல்லவா கேவலம் .. என்ன அம்மிணி நம்மவாளுக்கு ஒரு சட்டம் அடுத்தவாளுக்கு ஒருசட்டம் அதுதானே நமது மனுதர்மம் .. புரிஞ்சுதோ.. ஆவா போவட்டும் .. அப்புறம் பாருங்கோ .. நிச்சயம் நம்மவால் CM. ஆயிடுவார் ..
Rate this:
Share this comment
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
09-டிச-201913:07:45 IST Report Abuse
மூலபத்திரம் சொடலைநாமாவா cm ஆனா நாடுபூரா குண்டுவெடிக்குமே ஒய்? அதுனாலதான் நம்மவால பார்த்தாலே எல்லாரும் பயப்படறா ஓய்....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09-டிச-201914:16:01 IST Report Abuse
Nallavan Nallavanஇதுல எதுக்குத் தேவையில்லாமே ?? விரலை வெச்சுக்கிட்டு சும்மா இல்லாமே .........
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
11-டிச-201914:25:23 IST Report Abuse
sankarதம்பி துரோகத்தை துரோகத்தால்தான் அடிக்க வேண்டும் - அடிப்போம்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-டிச-201910:05:59 IST Report Abuse
mindum vasantham உத்தவ் தாக்கரே வுக்கு உண்மையில் இயற்க்கை மீது ஆர்வம் இருக்கலாம் அவர் ஒரு wild life photographer
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X