அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் ரூ.1 லட்சம் கோடி வரி; சொல்கிறார் சிதம்பரம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (59)
Advertisement
GST,tax,p chidambaram,chidambaram,ஜி.எஸ்.டி., வரி,ரூ.1 லட்சம் கோடி,சிதம்பரம்

காரைக்குடி: ''மக்கள் மீது ரூ.1 லட்சம் கோடி வரியை மத்திய அரசு சுமத்த உள்ளது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்த அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி சேமித்த ரூ.1.75 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயமாக எடுத்து கொண்டது. ரூ.1.50 லட்சம் கோடியை 800 கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக கொடுத்து விட்டது. இதன் மூலம் ஏற்பட்ட பற்றாக்குறையை போக்க அடுத்த 10 நாட்களுக்குள் ரூ. ஒரு லட்சம் கோடி வரியை மக்கள் மீது சுமத்த உள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரியையும் உயர்த்த போகின்றனர். 8 சதவீதம் 12 ஆகவும், 12 சதவீதத்தை 18 ஆகவும் உயர்த்த உள்ளனர். திஹார் சிறையில் எனக்கு 'குறை ஒன்றும் இல்லை'. தெலுங்கானா என்கவுன்டர் விஷயத்தை ஆழமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாநில அரசு நடக்கவில்லை. டில்லி என்ற சூத்ரதாரி நுாலை ஆட்ட அதற்கேற்ப ஆடும் அரசு உள்ளது.

தேர்தலின் போது மக்களின் அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தினால் நாடு நேர்மையாக செல்லும். பொருளாதாரச்சிதைவு, சமுதாய அமைதியின்மை, பெண்கள் மீது வன்கொடுமை, வேலையின்மை போன்ற காரணத்தால் பா.ஜ.,விற்கும், மக்களுக்கும் தர்மயுத்தம் நடக்கிறது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201912:22:30 IST Report Abuse
Yaro Oruvan திஹார் சிறையில் எனக்கு 'குறை ஒன்றும் இல்லை'. ... அப்புறம் என்னத்துக்கு ஜாமீனுக்கு அப்படி அலஞ்சாரு நம்ம அப்புச்சி.. உள்ளேயே வச்சிருந்தா அவருக்கு நல்லதுங்கிறாரு.. நாட்டுக்கும் நல்லது.. செய்ங்க எஜமான் கூடிய சீக்கிரம்.. இந்தாளு ஜாமீன் கண்டிஷன் எல்லாத்தையும் மீருறாருன்னு புடிச்சி அமுக்குங்க
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
11-டிச-201909:17:49 IST Report Abuse
sankar பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் சேற்றை வாரி இறக்கிறார் - சேறு படாத தொலைவில் அரசும் - ஆகா சேறு உன் தலைமீது
Rate this:
Share this comment
Cancel
10-டிச-201915:07:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு முன்னாள் நிதி மந்திரி போல் பேசாமல் , படிக்காத உபிஸ் போல பேசியிருக்கிறார் இந்த அறிவாளி. வரிவருவாய்தான் ஒரு அரசாங்கத்திற்கு வருமானம் , அதை வைத்துதான் அரசாங்கம் நடக்கிறது ,சமூக நலன் சார்ந்த திட்டங்களும் , நாட்டின் கட்டமைப்பும் செய்யப்படுகிறது. இனிமேல் தான் இவருக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
Rate this:
Share this comment
truth tofday - india,இந்தியா
13-டிச-201908:56:39 IST Report Abuse
truth tofdayஅதற்காக சம்மதிக்கும் எல்லா பணத்தையும் வாரியாக கொடுத்துவிட்டு கோயில்களில் சுற்றுக்கு நிற்க்க வேண்டுமா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X