'பலாத்கார வழக்குகளில் 6 மாதங்களில் தீர்ப்பு'

Updated : டிச 10, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (15)
Advertisement
பாட்னா, பலாத்கார வழக்கு,நீதிபதி, 6 மாதங்களில், தீர்ப்பு,ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: ''பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் விசாரணையை, போலீசார் இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் எனக்கேட்டு, மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு, கடிதம் எழுத உள்ளேன்,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பீஹார் மாநிலம், பாட்னாவில் அவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான பலாத்காரம் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களை, வன்மையாக கண்டிக்க வேண்டும். பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளிலும், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளிலும், போலீஸ் விசாரணை, இரண்டு மாதங்களில் முடிய வேண்டும். அதன் பின், நீதிமன்றங்களில், இந்த வழக்குகளின் விசாரணையை, ஆறு மாதங்களில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு, மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளேன். விரைவு நீதிமன்றங்களில் நடந்து வரும், பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகளை, உடன் முடிக்க வேண்டும் என கேட்டும், தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதுவேன். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-டிச-201908:39:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni கெடுக்கப்பட்டவள் செத்துடுவா கெடுத்தவன் அடுத்த எவளும் கிடைக்கலீன்னா சுத்தம் என்று சொல்லிப்பான் ஆனால் ஆறுமாசம் ரொம்பவே ஆதிக்கமுங்கோ ஆறே நாள்தான் தேவை போட்டு தள்ளறதுக்கு கடுமையான தண்டனை என்றால்தான் நீதிப்பிள்ளைக்கும் இல்லேன்னா அவ்ளோஜாலியா சிறையிலே வேளாவேளைக்கு சோறுகொட்டிண்டு ஜாலியா இருப்பானுக வெளியேவர்ரச்ச திருந்தாமலே
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-டிச-201922:00:25 IST Report Abuse
Nagarajan D ஆறு மாதத்தில் கேசு முடியவில்லை என்றால், வாய்தா கொடுத்தால் வாய்தா கொடுத்த நீதிபதியை என்கவுண்டர் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
09-டிச-201918:19:37 IST Report Abuse
Gopi இரண்டு மாதங்கள் தான் சரியான தீர்வு. ஆறுமாதம் மிகவும் நீண்ட இடைவெளி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X