தமிழ்நாடு

வீண்: போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் வாகனங்கள் : பாதுகாப்பு இல்லாததால் மண்ணில் புதையும் அவலம்

Added : டிச 09, 2019
Share
Advertisement

உத்தமபாளையம்:உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்த டூவீலர்கள் கார்கள் மண்ணிற்குள் புதையுண்டு போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில்,போலீஸ் ஸ்டேஷன்,மதுவிலக்கு , மகளிர் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளன. இதில் போலீஸ் ஸ்டேஷன், மதுவிலக்கு ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த நுாற்றுக்கணக்கான டூவீலர்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த டூவீலர்களும், வாகனங்களும் நிறுத்தி வைத்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.இதனால் இவ் வாகனங்கள் செடிகொடிகள் வளர்ந்து, மண்ணிற்குள் புதையும் அவலத்தில் உள்ளது.


மண்ணுக்குள் தேடனும்:



பறிமுதல் செய்த வாகனங்களை, நீதிமன்ற அனுமதி பெற்று ஏலத்தில் விடலாம். அல்லது அவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் கோர்டில் வழக்கு முடிந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வாகனங்களை ஒப்படைக்க நேர்ந்தால், மண்ணைத் தோண்டித் தான் தேட வேண்டிய நிலை வரும்.

எனவே பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்கள் , வாகனங்களை முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை இங்கு மட்டுமின்றி அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இதே நிலை இருப்பதால், தேனி எஸ்.பி.,சாய்சரண்தேஜஸ்வி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X