கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (16)
Advertisement
pregnant,wife,husband,chair,china,கர்ப்பிணி மனைவி,நாற்காலி,கணவர்

இந்த செய்தியை கேட்க

பெய்ஜிங்: சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவருக்காக காத்திருந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன.





கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை. தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார். இதன் சிசிடிவி பதிவு வெளியாக, சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-டிச-201913:13:53 IST Report Abuse
இந்தியன் kumar வளர்ந்த நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனாவுக்கு நாட்காலி பஞ்சமா என்ன ???
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
09-டிச-201915:35:09 IST Report Abuse
S.Ganesan இந்த படத்தில் பார்க்கும் பொது , பல ஆண்கள் மொபைல் போன் பார்த்தபடி உட்கார்ந்து உள்ளது தெளிவாக உள்ளது. அவனுகளுக்கு புத்தி ,மனித நேயம் எல்லாமே அற்று போய்விட்டது போலும் .
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201915:02:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நாங்கள் கர்ப்பிணி மனைவிக்கு என்னவெல்லாம் செய்கிறோம் அதெல்லாம் செய்தியாகிறதா ? சோர்வாக எழுந்து போகமுடியாத நிலையில் அவள் வாந்தியை கூட கையில் பிடித்து எடுத்து சென்று கழுவி இருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X