எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு; ஜன., 31ம் தேதி பணி நிறைவு?

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (3)
Advertisement
BSNL,VRS,விருப்ப ஓய்வு,பி.எஸ்.என்.எல்.,பணி நிறைவு

பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல விண்ணப்பித்த ஊழியர்களுக்கான பணி காலம், ஜன., 31ம் தேதி நிறைவடைவதாக, அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுதும், இரண்டு லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்.,லில், விருப்ப ஓய்வு திட்டம், நவ., 4 முதல், டிச., 3ம் தேதி வரை, அமலில் இருந்தது. இதில், 79 ஆயிரம் பேர், விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் பணி காலம் ஜனவரியில் நிறைவடைவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கூறியதாவது: விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும், 79 ஆயிரம் பேரும், தமிழகத்தில், 8,000 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரது பணி காலம், ஜன., 31ம் தேதி உடன் நிறைவடைகிறது. இவர்களுக்கான விருப்ப ஓய்வு தொகை எப்போது வழங்கப்படும் என, இதுவரை அறிவிக்கவில்லை. அக்., மாத சம்பளம் இதுவரை வராத நிலையில், விருப்ப ஓய்வு தொகை எப்போது வழங்கப்படுமோ? என்ற கவலையில், விருப்ப ஓய்வை தேர்வு செய்தவர்கள் உள்ளனர்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-201921:09:17 IST Report Abuse
ஆப்பு நீங்களாப் போய்விடுவது நல்லது. அப்புறம் அம்பானி, அதானி யாராவது வந்து தூக்குவாங்க.. காசும் கிடைக்காது. கோர்ட், கேஸ்னு பாப்ரி மசூதி ரேஞ்சுக்கு இழுத்தடிப்பாங்க. தேவையா?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-டிச-201914:43:47 IST Report Abuse
மலரின் மகள் மிக்கசீக்கிரமாக கிடைக்கவே வாய்ப்புக்கள் அதிகம் தெரிகின்றன. அதற்கான பணம் தனியாக ஒதுக்கப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக காலதாமதமாக ஊதியம் என்ற நிலை தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
09-டிச-201907:26:08 IST Report Abuse
kalyanasundaram EFFICIENCY IN THIS ORGANISATION BOUND TO IMPROVE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X