பொது செய்தி

இந்தியா

5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

இந்துார்:நாடு முழுவதும் உள்ள, ஐ.ஐ.டி.,க்களில், கடந்த ஐந்தாண்டுகளில், 27 மாணவர்கள்
தற்கொலை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஏழு தற்கொலைகளுடன், சென்னை ஐ.ஐ.டி., முதலிடத்தை பிடித்துள்ளது.


சென்னையில் அதிகம்இந்திய தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை, மும்பை, டில்லி, காரக்பூர் உள்ளிட்ட, 23 இடங்களில் உள்ளது. இங்கு, மாணவர்கள் தற்கொலை செய்வது, சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஐந்தாண்டு களில், ஐ.ஐ.டி.,க்களில் நடந்த தற்கொலை குறித்து,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சந்திரசேகர கவுர் என்பவர் தகவல் கேட்டிருந்தார்.

இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வித்துறை
அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில், ஐ.ஐ.டி.,க்களில், 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 10 ஐ.ஐ.டி.,க்களில் மட்டுமே இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் அதிகபட்சமாக, சென்னை ஐ.ஐ.டி.,யில், ஏழு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.எந்த பதிலும் இல்லைஇதற்கு அடுத்தபடியாக, காரக்பூர் ஐ.ஐ.டி.,யில், ஐந்து பேரும், டில்லி, ஐதராபாதில் தலா நான்கு பேரும் தற்கொலை செய்துள்ளனர். மும்பை, கவுஹாத்தியில், தலா இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், என்ன காரணத்துக்காக
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-201912:20:29 IST Report Abuse
நக்கல் புத்திரசோகம் மாதிரி கொடுமையான விஷயம் உலகத்தில் கிடையாது.... குழந்தைகள் விருப்பத்துக்கு அவர்கள் எதை படிக்க அதிக ஆர்வம் கொள்கிறார்களோ அதில் பெற்றோர்கள் அவர்களை விட்டுவிட வேண்டும், அது எந்த படிப்பாக இருந்தாலும் சரி.... அதை விட்டு விட்டு அவர்களுக்கு விருப்பம் இல்லாத இடங்களில் அவர்களை திணிப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு பெற்றோர்கள் சில நேரம் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடுகிறது... குழந்தைகள் சந்தோஷமாகவும் ஆரோக்யமாகவும் இருப்பது மட்டும்தான் பெற்றோர்களின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்... நல்ல ஒழுக்கத்தை சிறு வயதிலிருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்..... அவர்களுக்கு நமது புராண இதிகாச கதைகளை சொல்லி அதில் இருக்கும் நீதியை சொல்லவேண்டும்... இதை பள்ளிகளில் ஒரு பீரியடாகவே வைக்கலாம்...
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09-டிச-201913:43:49 IST Report Abuse
Mirthika Sathiamoorthiபொத்தாம் பொதுவான கருத்து....சமீபத்திய பாத்திமாவின் மரணம்.. காரணம் ஆசிரியர்கள் என பதிவிட்டுள்ளார்..இதில் எங்கு பெற்றவர்கள் வந்தனர்? காரணத்தை கல்வி நிர்வாகம் வெளியிட மறுக்கிறது..ஏன்? பெற்றவர்கள் தான் என்றால் தைரியமாய் சொல்லலாமே? ...இங்கு தற்கொலையை மட்டும் கூறியவர்கள் பாதியில் படிப்பை விட்டவர்களின் புள்ளிவிவரங்கள் இல்லை.... பாத்திமாவின் மரணத்துக்கு பின் இயல்பாய் எழும் கேள்வி....இறந்தவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள்....அதுமட்டும் வெளிவந்திருந்தால் பெரும் பூகம்பம் வெடிக்கும்.. தயவுசெய்து உண்மைக்காரணம் தெரியாமல் பெற்றவர்களை குற்றவாளியாகாதீர்கள்....உயர்கல்வியில் தற்கொலை...அது இந்தியாவில் மட்டுமே...வாழ்க பாரதம்......
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
09-டிச-201912:12:48 IST Report Abuse
Vivekanandan Mahalingam அறிவில்லாத ஆலயத்திற்கு இந்த செய்தியை அனுப்பணும். அவர்கள் ஜாதிய பாத்து அரசியல் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
09-டிச-201907:55:57 IST Report Abuse
blocked user சுடலை இவர்களுக்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டார். ஏனென்றால் இவர்கள் எல்லோரும் சிறுபான்மையினர் அல்லர்.
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09-டிச-201913:50:40 IST Report Abuse
Mirthika Sathiamoorthiசமீபத்தில் இறந்த பாத்திமா சிறுபான்மை இல்லியா? சுடலை குரல் கொடுக்கலியா? இந்த மரணம் சிபிஐ கைக்கு போனதே எதிர்க்கட்சிகளின் அழுத்தம்...அதெப்படி இறந்தவர்கள் சிறுபான்மை இல்லை எனும் முடிவுக்கு வந்தீர்கள்? யார் வெளியிட்ட புள்ளிவிவரம்? இந்த 27 பேர் இறந்த விஷயம் வெளிவர காரணம் தகவல் அறியும் உரிமை சட்டம்....மத்திய கல்வி துறை தானே முன்வந்து வெளியிட்ட தகவல் அல்ல...தற்கொலைக்கான காரணத்தை கேட்டதற்கு பதில் இல்லை...நமக்கு சுடலையை சொரியலைன்னா தூக்கம் வாராது இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X