பொது செய்தி

இந்தியா

பெண் குழந்தை கட்டாயம் வேண்டும் :உ.பி.அமைச்சர்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ: இந்துக்கள் குடும்பத்தில் குறைந்தது மூன்று குழந்தைகள் வேண்டும் அதில் ஒன்று பெண் குழந்தை கண்டிப்பாக இருக்க வேண்டும் என உ.பி.,அமைச்சர் சுனில் பாரல்லா கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நம்முடைய சட்டம் நாம் இருவர் ,நமக்கு இருவர் என இரண்டு குழந்தைகள் இருப்பதற்கு மட்டும் கோருகிறது. ஆனால் தற்போது இந்துக்கள் குடும்பத்தில் பெரும்பாலனவற்றில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்து விட்டது.







இனிமேல் நாம் நாங்கள் ஐந்து என்ற கொள்கையை ஏற்க வேண்டும். இதன் அர்த்தம் ஒரு குடும்பத்தில் தாய் தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் என ஐந்தாக நாம் ஐவர் என கூற வேண்டும். குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளில் ஒன்று கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உறவு முறைகள் தெரிய வரும் . ஒரு குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் அத்தை பாட்டி போன்ற உறவு முறை குறித்து எப்படி தெரிய வரும் . இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். என கூறினார்.






முன்னதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட என் கவுன்டர் குறித்து கேட்டதற்கு போலீசார் தங்கள் தற்காப்புக்காக அவர்களை கொன்றதில் தவறில்லை.மேலும் உன்னாவ் சம்பவத்தில் குற்றவாளிகளை அரசு எளிதில் விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-டிச-201917:13:33 IST Report Abuse
மலரின் மகள் வடக்கில் குறிப்பாக பீகார் அடுத்து உ பி யில் இந்த எண்ணம் அதிகம் இருக்கிறது. தமிழகத்திற்கு வித்தியாசமாக தெரிந்தாலும் அங்கு இவரின் பேச்ச்சுக்கு மக்கள் மனா நிலை பிரதிபலிப்பு எனலாம். அங்கு முஸ்லிம் எண்னிக்கை பெருகி இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று பேச்சுக்கள் உண்டு. அரசு குழந்தைகளுக்கு இனி முழு அளவிலான பொறுப்பை ஏற்கவிருக்கிறது என்று அறிகிறார்கள். கல்வி உணவு உடை அனைத்தும் அரசின் திட்டங்களில் அதுவும் குடும்ப கட்டுப்பாடு என்ற எண்ணத்தை பின்பற்றாமல் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அரசின் வசதிகள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசு உண்மையாயிருக்கிறது. இதனால் வரும் சமூக மத ஏற்றத்தாழ்வுகளை ஏற்ப கருத்துக்கள் மாறுகின்றன. இந்துக்கள் அனைவரும் குறும்பத்திற்கு இரண்டு குழந்தை அல்லது ஒரு குழந்தை இருக்க, அந்த மாநில முஸ்லிம்கள் பெரிய குடும்பமாக வளருங்கள் நமது மதத்தை பெருக்க இதுவே வழிமுறை என்றும், உங்களின் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகளுடன் நமது மதத்தின் மதரஸாக்கள் மூலமாகவும் பண உதவி வேறு பல உதவிகளை செய்து தருகிறோம் என்று பிரசாரம் வேறு செய்கிறார்கள். அடுத்து பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் வளைகுடா தேசத்தில் சென்று பணிபுரிய அவர்கள் உதவி செய்கிறார்கள். இது போன்ற சூழலில் அங்கே முஸ்லிம்கள் பெருகி அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்பாளாக அங்கே இருக்கிறார்கள். மதம் தவிர வேறெந்த வகையிலும் பற்றுள்ளவர்களாக தேசபற்றுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் தீவிர அறிந்து சொல்பவர்கள் எங்கே ஏராளம். அரசு ஒருதலையாக இருப்பதாக நம்புகிறார்கள் அங்குள்ளோர் அதனால் தான் இந்துக்கள் குடும்பங்களில் அங்கே நாம் இருவர் நமக்கிருவார் என்பது இல்லை. குறைந்தது மூன்று குழந்தைகள் தேவியான இடைவெளியில் பெற்று கொள்கிறார்கள். எனது வாடா இந்திய தோழிகளின் குடும்பத்தில் அனைவருமே குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். எனக்கும் அறிவுரை வேறு அவர்களிடமிருந்து. தமிழகத்தின் பார்வையில் வட இந்தியாவை நோக்க முடியாது. அமைச்சரின் கருத்து சமுதாயத்தை பிரதிபலிக்கறது என்பதை விட தவிர்க்க முடியாததும் அவசியமானது தான்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-டிச-201915:15:22 IST Report Abuse
pattikkaattaan சிலருக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துவிடுகிறது .. அதற்க்கு என்ன செய்யலாம் அமைச்சரே ?..
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
09-டிச-201913:12:21 IST Report Abuse
Tamilan மொதல்ல இருக்கிற பெண்களுக்கு ஒழுங்கா பாதுகாப்பு கொடுக்க வழிய பாருங்க ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X