உன்னாவ் சம்பவம்: 7 போலீசார் சஸ்பெண்ட்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (17)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ : உன்னாவ் சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீசார் 7 பேரை உ.பி., அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.






இது குறித்து மாநில தலைமை செயலாளர் அவனிஷ் அவஸ்தி வெளி்யிட்டுள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது:

உ.பி.,யின் உன்னாவ் பகுதியில் பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் உதவி கேட்டு உடலில் எரியும் நெருப்புடன் ஒரு கி.மீ., தூரம் வரை ஓடிச் சென்றுள்ளார். 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தொடர்ந்து பலத்த பாதுகாப்பிற்கிடையே அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.





இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக உன்னாவ் போலீசார் 7 பேரை சஸ்பெண்ட் செய்து உ.பி., அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ
10-டிச-201900:01:10 IST Report Abuse
vinaikumar உன்னாவ்: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கொலையான பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்பட்ட ஷிவம் திரிவேதிக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில், ஜனவரி 15ம் தேதி 2018ம் ஆண்டு கோயிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்வோம் என்று சுயநினைவோடு எழுதிக் கொடுக்கிறோம் என்று இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அப்பெண்ணின் ஜாதியைக் காரணம் காட்டி, ஷிவம் திரிவேதியின் குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், திருமண ஒப்பந்தம் முறிக்கப்படுகிறது. இதையடுத்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், அப்பெண், ஷிவம் திரிவேதிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்கிறார். அப்போதில் இருந்தே, வழக்கைத் திரும்பப் பெறுமாறு, அப்பெண்ணுக்கு ஷிவம் திரிவேதி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர் எஸ்.என். மௌரியா கூறுகிறார். இந்த நிலையில்தான் பெயிலில் வந்த ஷிவம் திரிவேதி, மேலும் நான்கு பேருடன் சேர்ந்து அப்பெண்ணைத் தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இப்போ புரியுதா ஏன் பிரியங்கா காந்தி அழுவுகிறார், அகிலேஷ் டிராமா போடுகிறார் என்று? மற்றோரு பொய்யான கற்பழிப்பு வழக்கு. இது போன்ற பொய்யான கற்ப்பழிப்பு வழக்குகளால் தான் நிஜமான கற்ப்பழிப்பு வழக்குகள் முடிவுக்கு வர நிறய கால தாமதம் ஆகிறது. சட்டங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகள் சரியான தகவல்களை மக்களுக்கு தரவேண்டும். ஒருவேளை கற்ப்பழித்திருந்தால் தன் முன்னாள் கணவர் கற்பழித்தார் என்று தானே இருந்திருக்க வேண்டும்? ஏன் பிஜேபி mla மகன் என்று சொன்னார்? அது யாருடைய தூண்டுதல் பேரில் சொன்னார்?
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09-டிச-201915:27:51 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அப்படியே காஷ்மீர் கோவில்ல நடந்த கொடுமையையும் பற்றி பேசுங்க.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09-டிச-201915:25:58 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பாவம் அவங்க மாடுகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த போயிருக்கச்ச இப்படி நடந்துட்டுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X