இந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர் | Boris Johnson election campaign song in Hindi is a hit on internet, social media calls it attempt to woo Indians in UK | Dinamalar

இந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (18)
Share
லண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.இங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும்

இந்த செய்தியை கேட்க

லண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.latest tamil news
இங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும் பாடல் போரிஸ் ஜான்சனுக்காக வாக்களிக்கவும் என்ற பொருள் படும் பாடல் ஒன்று சமூக வலை தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


latest tamil newsஇது மட்டுமல்லாது ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபட்ட போரிஸ் ஜான்சன் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி உடன் கைகோர்க்க உறுதி மொழியையும் எடுத்து கொண்டார். பிரதமரின் இந்தி பிரசார பாடல் சமூக வலை தளங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள போதிலும் பிரதமருக்காக பாடல் வெளியிடப்பட்டதா அல்லது யாராவது டப்பிங் செய்து வெளியிடப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட வில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X