இந்த செய்தியை கேட்க
புதுடில்லி:லோக்சபா, சட்டசபைகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட
ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நாட்டில் அரசியல் சட்டம், 1950ம் ஆண்டு, ஜனவரி, 26ல் அமலுக்கு வந்தது. லோக்சபா மற்றும் சட்டசபைகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடம் பெறுவதற்காக, இடஒதுக்கீடு அமல் செய்யப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு, 70 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என,
அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த இடஒதுக்கீடு, அடுத்த ஆண்டு, ஜனவரி, 25ம் தேதியுடன் முடிகிறது. இந்த
இடஒதுக்கீட்டை, மேலும், 10ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.எனினும், ஆங்கிலோ - இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த இருவர், லோக்சபாவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நியமனம் நீட்டிக்கப்படமாட்டாது என,மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
லோக்சபாவில், தற்போது, 543 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், தாழ்த்தப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்த, 84 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 47 பேரும் உறுப்பினர்களாக
உள்ளனர்.மாநில சட்டசபைகளில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 614 பேரும்,
பழங்குடியினத்தைச் சேர்ந்த, 554 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE