கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (59)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு : கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று ( டிச.,9) வெளியானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் 12 இடங்களில் பா.ஜ.,வும், காங்., 2 , தொகுதிகளில் வெற்றி பெற்றன.






கர்நாடகாவில் மஜத - காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஆட்சியை கலைக்க பா.ஜ அரசு பல முயற்சிகளை செய்தது. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர். இந்த எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து மாநிலத்தை ஆளும் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. புதிய அரசாக பா.ஜ பொறுப்பேற்றுக் கொண்டது. மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.





இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். வழக்கு விசாரணையில், இந்த தகுதி நீக்கம் செல்லும் எனவும் இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட தடை இல்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூரில் உள்ள மஸ்கி தொகுதியை தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிச.,5 ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று கர்நாடகா முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவில் பாஜ., 12 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-டிச-201922:18:52 IST Report Abuse
Rafi நம் ஊர் திருமங்கலம் பார்முலா, சும்மா ஜுஜுபி என்ற நிலையில் நடந்த இடை தேர்தல் பகுதிகளில் மக்கள் செல்வ செழிப்போடு இருந்ததை ஊடகங்கள் ஏற்கனவே சுட்டி காட்டியிருந்தது. ஆட்சியை மாற்ற கோடிகளை இறைத்தவர்களுக்கு, அதை தக்க வைக்கவா தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
09-டிச-201921:28:20 IST Report Abuse
Mani iyer Vijayakumar மக்கள் நிலையான ஆட்சிக்கு கொடுத்தமுடிவு
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
09-டிச-201920:51:53 IST Report Abuse
Krishna As Long As EVMs Are There BJP Will Win
Rate this:
Share this comment
09-டிச-201922:50:32 IST Report Abuse
கிம்பாbecause of your father...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X