பொது செய்தி

தமிழ்நாடு

சற்று குறைந்த வெங்காய விலை : மக்கள் ஆறுதல்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (38)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : சென்னையில் வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






வரத்து குறைவால் 2 நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. இதனால் வெங்காயம் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்றன. வெங்காய் விலை உயர்வை குறிப்பிட்டு ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திகார் சிலையில் 106 நாட்கள் இருந்து விட்டு, ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்., கட்சியினர் வெங்காய மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். கடலூரில் நடைபெற்ற திருமண ஒன்றிற்கு மணமகனின் நண்பர்கள் வெங்காயத்தால் ஆன பொக்கேவை பரிசாக வழங்கி உள்ளனர்.




இந்நிலையில் இன்று வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.160 ஆகவும் உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாயப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-டிச-201904:31:07 IST Report Abuse
 nicolethomson எனது வயலுக்கு பக்கத்தில் வெங்காயம் விளைவித்தனர் , சிற்றதுர்காவில் இருந்து வந்த வியாபாரிகள் ஐம்பது கிலோ மூட்டையை 900 ரூபாய்க்கு வாங்கினார் நல்ல தரத்தில் இருந்த வெங்காயத்தை அவர் பெங்களூரிலோ , தமிழ்நாட்டிலோ என்ன விலைக்கு வீற்றிருப்பார் என்று விவசாயிக்கு சொன்னதும் அவரின் முகம் சிறுத்து போனது , நமது வெள்ளாமையை இப்படி கொள்ளை அடிக்கின்றனர் என்று வேதனையோடு சென்ற அந்த முதியவருக்கு என்ன வார்த்தை சொல்வது
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
09-டிச-201920:43:07 IST Report Abuse
Nathan என் அட்வைஸ், இன்னும் இறக்குமதி வெங்காயம் வரும் வரை , பதுக்கலில் அழுகிய அதிக விலை வெங்காயத்தை வாங்காதீர்கள், உடலுக்கு கெடுதல். அதற்கு பதிலாக,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சுவைக்கு ஏற்ப ஜமாயுங்கள். ஓட்டலில் வெங்காயம் போட்டா, 15 நாட்கள் தவிருங்கள் அந்த உணவை. இட்லி சட்னி காரப்பொடி எண்ணை யாவர்க்கும் ஓகே. இப்ப இன்ஜக்ஷன் போட்ட 20 நாள் சிக்கன் தவிருங்கள், கான்சர் வரும். நீங்கள்தான் புத்தி கற்பிக்க வேண்டும். இசுலாமியர் நாடுவது பாமிலியுடன் சைவ ஓட்டல்களே.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
09-டிச-201920:30:35 IST Report Abuse
jagan ஒரு ரெண்டு வாரம் யாரும் வெங்காயம் வாங்காம இருந்தா, தானா விலை குறையும். இதை சொன்ன நிதியமைச்சருக்கு ஜாதி பட்டம்.
Rate this:
Share this comment
MIRROR - Thamizhagam,இந்தியா
09-டிச-201921:46:27 IST Report Abuse
MIRRORதானாக குறைவதற்கு அரசு எதற்கு ? அமைச்சர் எதற்கு ? என்னத்த சொல்ல ?...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
10-டிச-201906:50:11 IST Report Abuse
கதிரழகன், SSLCவிலையை கட்டு படுத்தறது அரசின் வேலை இல்லை. அரசு பாதுகாப்பு நீதி சட்டம் ஒழுங்கு தவிர வேற எதையும் செய்ய கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X