பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (29)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார். இந்நிலையில் குற்றவாளிகளில் 6 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தால் அவன் விடுதலை செய்யப்பட்டான். மற்றொருவன் விசாரணையின் போது சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.





மீதமுள்ள 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் வினய் சர்மா என்பவன் அனுப்பிய கருணை மனுவை டில்லி அரசு, டில்லி துணைநிலை கவர்னர், உள்துறை அமைச்சகம் ஆகியன நிராகரித்தன. ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை திரும்பப் பெறுவதாக வினய் சர்மா தெரிவித்தான். இதற்கிடையில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் இல்லை எனவும், நாட்டின் மற்ற சிறைகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஊழியர்கள் இருந்தால் அனுப்பும் படி கேட்டுள்ளதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் 2013 ம் ஆண்டு பிப்.,13 அன்று, பார்லி.,தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு யாருக்கும் தூக்கு நிறைவேற்றப்படாததால், அப்பணியை நிறைவேற்ற ஆட்கள் இல்லாமல் திகார் சிறை நிர்வாகம் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-டிச-201904:11:07 IST Report Abuse
J.V. Iyer இந்த கற்பழித்த கயவர்களுக்கு முதலில் பிறப்புறுப்பை அறுக்கவேண்டும். இவ்வளவு நாள் என்ன செய்தார்கள்??
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
10-டிச-201900:34:31 IST Report Abuse
kumzi இன்னும் வயதுக்கு வராத ருசிகண்ட பூனை இப்போது வயசுக்கு வந்திருக்கும் இப்போதே போட்டுவிடுங்கள் இல்லனா வாய வைக்காமல் விடாது
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-டிச-201923:55:56 IST Report Abuse
Rajagopal இவனுகள ஓட விட்டு, தெருவுல எல்லார் கையிலையும் கத்தி, அருவாளுங்களக் குடுத்து, எறீங்கடான்னு சொல்லிட்டா, ஒரு நூறு மீட்டர் கூட இவனுகளால தாண்ட முடியாது. அலறிக்கிட்டே சாவானுக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X