உள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் திமுக மீண்டும் முறையீடு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிச.,09) மீண்டும் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





2016ம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த தமிழக தேர்தல் கமிஷன், சமீபத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
இதனை எதிர்த்து திமுக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதில், வார்டு வரையறை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், வார்டு வரையறை உறுதி செய்யப்படும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என முறையிட்டிருந்தது.




இவ்வழக்கை கடந்த வாரம் விசாரித்த சுப்ரீம் கோர்ட், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. இதற்கிடையில் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிவிப்பாணையை வாபஸ் பெற்ற தமிழக தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்கு முன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற திமுக செயலாளர்கள் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டலை வரவேற்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய அறிவிப்பாணையை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இன்று (டிச.,09) ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணையை எதிர்த்து திமுக மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.




புதிய அறிவிப்பாணையின்படி, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி உள்ளது. இந்நிலையில் திமுக மீண்டும் முறையீடு செய்துள்ளது. திமுக.,வின் கோரிக்கையை ஏற்று டிச.,11 ம் தேதி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-டிச-201911:33:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாதுன்னு திட்டமிட்டு வேலை பாக்குதுன்னு சொன்னதுக்கு, வழக்கு விசாரணையில் கோபமான நீதிபதிகள், "தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது. ஆனா, நாங்கள் நினைத்தால் மொத்தமாக தள்ளிப்போட முடியும். நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் என்ன விதிகள் வகுக்கப்பட்டதோ அதன்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். குறுக்கு வழியில் தேர்தலை நடத்தக் கூடாது'' என கொட்டு வைத்தனர்.
Rate this:
Share this comment
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
09-டிச-201918:30:38 IST Report Abuse
Kandaswamy ஜெய்ஹிந்து, வீட்டுல நல்லா மந்திரிச்சிருப்பாங்க போல என்னமா உளறுது...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-201917:38:49 IST Report Abuse
J.V. Iyer பயம்..பயம்.. தேர்தலைக்கண்டால் பயமாக உள்ளது. ஏமாற்ற வழி இல்லை. எனவே தேர்தலை தள்ளி வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X