பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கலுக்கு 293 எம்.பி., ஆதரவு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (75)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 பேர் எதிராக ஓட்டளித்தனர்.






வங்கதேசம், பாக்., ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இதற்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.





மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா, 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிரானது என குறிப்பிடும் வகையிலான எதுவும் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்காததால் தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதா மீது இன்றே ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
10-டிச-201911:53:35 IST Report Abuse
மூல பத்திரம் எனக்கு ஒன்னும் புரியல இந்த சட்டத்தை பற்றி ஆனால் போலி மதசார்பின்மை திராவிஷர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயம் நல்ல சட்டமாகவே இருக்கும். அது சரி இந்த சட்டம் எல்லாம் திராவிஷர்களுக்கு புரிந்து தான் எதிர்க்கின்றார்களா. தெரியாமல் தான் கேட்கறேன்
Rate this:
Share this comment
Cancel
Arachi - Chennai,இந்தியா
10-டிச-201907:02:33 IST Report Abuse
Arachi ஒரு நண்பர் அமெரிக்கா என்றும் மறைமுகமாக கிறிஸ்தவ நாடு என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி நல்லா இருந்த இந்திய நாட்டை இப்படி மத வாரியாக பிரித்து பேச வைத்துவிட்ட பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது. அமெரிக்கா மெதுவாக ஒரு இந்து தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது இவருக்கு தெரியாது போலும். ஏக்கர் கணக்கில் நிலங்கள் வாங்கி இந்து கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்து விடாதீர்கள்.லட்ச்ச கணக்கான இந்தியர்களுக்கு வாழ்விடமாக உள்ளது அந்த கிறிஸ்தவ நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-டிச-201923:01:53 IST Report Abuse
Rafi இஸ்லாமியர்கள் தான் அதிகம் குடி பெயர்ந்தவர்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிராக இந்துக்கள் தான் அதிகம் என்று தெரிந்தவுடன், இப்போது இந்துக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுப்பது போல்சட்டம் இயற்ற முன்வருவது, அதனால் இஸ்லாமியர்கள் பாதிப்பு அடைவார்கள் என்பதை இவருடைய இரட்டை வேடத்திற்கு தெரிவில்லை போலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X