குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் காங்., : மோடி விளாசல்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (49)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பர்ஹி : காங்- மஜத., குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்பதையே கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






கர்நாடகாவில் 17 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் யெ்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.,5 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. பா.ஜ.,விடம் ஏற்கனவே 106 எம்எல்ஏ.,க்கள் உள்ள நிலையில், 6 ல் வெற்றி பெற்றால் பெரும்பான்மையை பெற முடியும் என்ற நிலையில் பா.ஜ., இந்த தேர்தலை எதிர்கொண்டது. இதில் 15 ல் 12 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு, ஆட்சியை தக்க வைத்தது.





இந்நிலையில் ஜார்கண்ட் ஹசாரிபாக் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்.,- மஜத., பின்வாசல் வழியாக, குறுக்கு வழியில் திருடப் பார்த்தது. மக்கள் அவர்களுக்கு தற்போது சரியான பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். பா.ஜ., மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. பா.ஜ., வந்தால் மட்டுமே அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என மக்கள் நம்புகிறார்கள் என்பது நிரூபனமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-201923:21:38 IST Report Abuse
மாட்டுகுப்பன் நம்ம பிரதமருக்கு ஒரு கிலோ வெங்காயம் பார்சல்????????
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
09-டிச-201921:44:06 IST Report Abuse
Ramakrishnan Natesan எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது மானிட அறிவு
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
09-டிச-201921:10:34 IST Report Abuse
mohan சாமி புரியலைங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X