அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாஜ., கடுமையான விளைவை சந்திக்கும்; சிதம்பரம் எச்சரிக்கை

Added : டிச 09, 2019 | கருத்துகள் (123)
Advertisement
Chidambaram, CitizenshipBill, சிதம்பரம், குடியுரிமைசட்டம், அகதிகள்சட்டம், காங்கிரஸ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வான ரகுபதியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அங்கு ரகுபதி மற்றும் காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. மத்திய அரசு இதற்கு பதிலாக எல்லா நாடுகளிலும் உள்ளது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். அதிலுள்ள பல மரபுகளை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை என்ற தவறான சட்டத்தை அரசு கொண்டு வருகிறது.




கிட்டத்தட்ட 1600 கோடி ரூபாய் அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிப்பதற்காக மத்திய அரசு செலவு செய்தது. அதனை அசாம் அரசு நிராகரித்ததால் 1600 கோடி ரூபாய் வீணானது. அப்போது நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை, முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜ., அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் தவறு.
அதற்காக பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும். இதை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வருவது விவேகமானது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
15-டிச-201914:40:57 IST Report Abuse
S.V.SRINIVASAN ஏன் ஐயா நீயும் சட்டம் படித்தவன்தானே உச்ச நீதி மன்றம் என்ன சொல்லி உனக்கு ஜாமீன் கொடுத்திருக்கு. நீதி மன்ற உத்தரவை மதிக்காம நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தத உளறிக்கிட்டு இருக்க.
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
15-டிச-201909:24:29 IST Report Abuse
King of kindness திஹார் ஜெயிலை பார்த்தாகி விட்டது. சொந்த ஊரில் செமையாக வாங்கப்போவது நிலுவையில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
14-டிச-201920:21:02 IST Report Abuse
Sowmya Sundararajan இந்த ஆளை வெளியில் விட்டது தப்பு. வந்துட்டாரு .... நியாயம் பேச .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X