கபடி: இந்திய பெண்கள் 'தங்கம்'

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

காத்மண்டு; தெற்காசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் கால்பந்திலும் இந்திய பெண்கள் அசத்தினர்.






நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில் இன்று (டிச.,09) நடந்த பெண்கள் கபடி போட்டி பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீராங்கனைகள் முடிவில் 50-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றனர்.


கால்பந்தில் கலக்கல்






பெண்கள் கால்பந்து போட்டியின் பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் இந்தியாவின் பாலா தேவி முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இந்தியாவின் ரத்தன்பாலா 56வது நிமிடம் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதுவரை இந்தியா 138 தங்கம், 80 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 260 பதக்கங்கள் வென்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201901:31:09 IST Report Abuse
ருத்ரா தங்கம் தந்த சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
sankar -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-201918:39:34 IST Report Abuse
sankar வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201918:32:11 IST Report Abuse
VIJAIAN C congratulations
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X