கல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (32)
Advertisement
Bjp, NirmalaSitharaman, EducationalLoan, நிர்மலாசீதாராமன், பாஜ, கல்விகடன்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கல்வி கடன்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்விக் கடன் ரத்து செய்வது தொடர்பாக பார்லி கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி வரவேண்டிய கல்விக் கடன் ரூ. 75,451 கோடி அதிகரித்துள்ளது. இதிலும் சுமார் 10 சதவீதம் வாராக்கடனாக பட்டியலிடப்பட்டுள்ளது.





கல்வி கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், வங்கிகள் அளித்த அழுத்தத்தால், பல தற்கொலைகள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை. கல்விக் கடனை திரும்ப வசூலிப்பதில், மென்மையான போக்கை கையாள வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-டிச-201910:51:08 IST Report Abuse
elakkumanan உண்மையிலேயே கல்வி கட்டணம் கட்ட முடியாத அடிமட்ட நிலையிலிருப்பவர்கள் ரோஷமானவர்கள். வாங்கிய கடனை, அது யாரிடம் இருந்து வாங்கினாலும், கூலி வேலை செய்தாவது கடனை அடைக்கிறார்கள். அல்லது, கடனுக்கு ஈடான பொருளை (இடம்,வீடு,) கொடுத்து கடனை அடைக்கிறார்கள். சிறு கால தாமதங்கள் இருக்கலாம். உண்மையில், கீழ்த்தட்டு மக்கள், கடன் வாங்கும்போது, அடைக்கும் வழியை கவனமாக ஆராய்வார்கள், சில விதிவிலக்குகள், அசாதாரண சூழ்நிலைகள் தவிர்த்து, அவர்கள் நேர்மையாக இருப்பார்கள். இதற்கு மிக பெரிய உன்மையான காரணம், அவர்களுக்கு மீண்டும் தேவை படும்போது, பணம் கொடுக்க ஒரு சோர்ஸ் எப்போதும் தேவை. மற்றபடி, வாங்கி வயிறு வளத்துப் போட்டு, சட்டம் பேசுறதது, தள்ளுபடி கேக்குறது, உரிமையை பற்றி ஆத்துவது, கட்சி துண்டு போத்திகிட்டு திரியுறது. இதெல்லாம் கழக , கட்டுமர, திருட்டு கூட்டமே. வேறு வேறு பெயரில், சில சமயம் பேறே இல்லாமலும். காசு ஏமாத்துவது கழகத்தின் பிறப்புரிமை. உண்மையை உணருங்கள் வாசகர்களே .............நிர்மலா மேடம் செய்தது மிக சரி...................யாரு வூட்டு காசுன்னாலும் கழகம் ஏற்கும்.....
Rate this:
Share this comment
Cancel
10-டிச-201910:45:36 IST Report Abuse
ஆப்பு என்னவோ படிச்சா வேலை வாய்ப்பு கொட்டிக் கிடப்பதாக அடிச்சு வுட்டாங்க. ஸ்கில்ஸ் இந்தியா ஆ.. ஊன்னாங்க. கடன் வாங்கிப் படிச்சுட்டு வந்தா வேலை வெட்டி இல்லை. பேசாம படிக்க செலவழிச்ச காசுலே பக்கோடா கடை போட்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-டிச-201910:24:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹூம், ஹூம்.. இல்லை.. தள்ளுபடி இல்லை. கூரையே இல்லாத அம்பானி டுபாக்கூர் யுனிவர்சிட்டிக்கு ஆயிரம் கோடி தாராளம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X