நித்தியானந்தா எங்கே? கர்நாடகா ஐகோர்ட் கேள்வி

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (25)
Advertisement
nithyananda,kailasa,நித்தியானந்தா, கர்நாடகா கோர்ட், கேள்வி, எங்கே, கேள்வி, கர்நாடகா அரசு

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: 'நித்தியானந்தா எங்கே இருக்கிறார்' என கர்நாடகா ஐகோர்ட், மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள், ஆசிரமங்களில் பணிவிடை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹிந்துக்களுக்காக 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.





தற்போது தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, நாளுக்கு நாள் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பெண் குழந்தைகள் கடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில், குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. . ஈக்வேடார், நேபாளம் என பல்வேறு வெளிநாடுகளை கூறி வந்தாலும் பாஸ்போர்ட் 2018 ம் ஆண்டிலேயே காலாவதி ஆனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று டிச.12க்குள் அறிக்கை தர வேண்டும் என கர்நாடக அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு மற்றும் காவல்துறை விரிவான அறிக்கை தரவேண்டும் என்றும் கோர்ட் வலியுறுத்தி உள்ளது.






கடும் நடவடிக்கை


இது வரை நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது புதிராக உள்ள நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கார்நாடக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற மனு


ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்ற லெனின் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். 44 முறையும் நித்தியானந்தா ஆஜராகாததால் வேறு ஒரு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201910:42:41 IST Report Abuse
ஆப்பு யூ ட்யூபில் உலகெங்கும் வியாபித்திருக்கிறார். கனம் கோர்ட்டார் ஸ்மார்ட்போன், ஐபேட் எல்லாம் வெச்சுக்கலியா? யூ ட்யூப் பாருங்க. உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
10-டிச-201909:08:05 IST Report Abuse
oce வெற்றிலையில் மை போட்டு பார்த்தால் நித்தி இருப்பிடம் தெரியும். உள்ளதை உள்ளபடி காட்டும் பூதக்கண்ணாடியே நித்தி எங்கே இருக்கிறார் மறைக்காமல் சொல். எனக்கு ஜெமினி வேண்டாம். நித்திதான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
10-டிச-201909:00:15 IST Report Abuse
oce திருவண்ணாமலையில் மாறு வேடத்தில் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X