ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019
Advertisement
WADA,bans,Russia,Olympics,four years,World Anti-Doping Agency,over doping,ரஷ்யா,தடை,ஊக்க மருந்து,ஒலிம்பிக்,Russia,banned,Tokyo,Olympics,football,World Cup

லாசன்னே: ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு, டோக்கியோ ஒலிம்பிக் (2020), பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2022), உலக கோப்பை கால்பந்து (2022) உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பங்கேற்க, உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) தடைவிதித்துள்ளது.

கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில், பல ரஷ்ய நட்சத்திரங்கள் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த, அந்நாட்டு அரசே ஆதரவாக இருந்தது அம்பலமானது. இதனையடுத்து, ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க, கடந்த 2015 நவம்பரில் 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்ய தடகள நட்சத்திரங்கள் பங்கேற்க முடியவில்லை. மற்ற ரஷ்ய வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைக்குப்பின் ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து டபிள்யு.ஏ.டி.ஏ., சார்பில் மூன்று பேர் கொண்ட குழு, விசாரணை செய்தது. முடிவில், 323 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிட்டது. இதில், ரஷ்ய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனைகள் எதிலும் நம்பகத்தன்மை இல்லை. இங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் மாதிரிகளை திட்டமிட்டு அழித்து விட்டனர் என, தெரிவித்தது. இதனால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக், உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தியது.





இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டபிள்யு.ஏ.டி.ஏ., செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், டபிள்யு.ஏ.டி.ஏ., விசாரணை குழுவின் பரிந்துரையை ஏற்று, ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் (2020), 'பிபா' உலக கோப்பை கால்பந்து (2022, கத்தார்), பீஜிங் குளிர் கால ஒலிம்பிக் (2022) உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் ரஷ்ய நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாது.

இத்தடைக்கு எதிராக ரஷ்யா சார்பில் 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இருப்பினும் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்காத ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள், ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X