குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : 'குடியுரிமை சட்ட மசோதா, 0.001% கூட சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் தெரிவித்தார்.


டில்லியில் இன்று ( டிச.,9) நடந்த பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குடியுரிமை சட்ட மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நடந்தது. இந்த மசோதா குறித்து காங்., கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்ட மசோதா குறித்து அமித்ஷா கூறுகையில், இந்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாக்., வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்னையால் இந்தியாவிற்கு வரும் மக்கள் குடியுரிமை பெற முடியும். இந்த நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்தவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா முஸ்லீம்களுக்கு பொருந்தாது.

லோக்பாவில் பா.ஜ.,விற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மசோதாவும் நிறைவேறிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் இது எப்படி நிறைவேறும் என்ற நிலை எழுந்துள்ளது. இந்த மசோதா யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள், நான் அதை திரும்பப் பெறுவேன். இந்த மசோதா மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உரிமைகளை வழங்குகிறது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது. இம்மசோதா, 0.001% கூட சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல.

இந்த மசோதா குடியுரிமைச் சட்டம், 1955 இல் திருத்தம் செய்ய முன்மொழிகிறது, மேலும் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோத முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது, அவர்கள் அங்கு மதத் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியா திரும்பினர்.


அத்வானி, மன்மோகன் சிங் புலம்பெயர்ந்தவர்கள்

இம்மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவது தவறு. 1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் கிழக்கு, மேற்கு பாக்.,ல் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள். அத்வானியும், மன்மோகன் சிங்கும் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.


அதிமுக ஆதரவு:


ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் பா.ஜவில் தற்போது 102 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மற்ற சில கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே பா.ஜ பெரும்பான்மை பெற்று இந்த மசோதா நிறைவேறும். இந்நிலையில் பா.ஜவை ஆதரிக்க அதிமுக முடிவெடுத்துள்ளது. ராஜ்யசபாவில் 11 அதிமுக உறுப்பினர்களும் இந்த மசோதா நிறைவேற ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆதரித்தாலும் பா.ஜவின் பலம் 113 ஆக தான் இருக்கும். 120 தேவைப்படும் நிலையில் மேலும் சில நட்பு கட்சிகளின் உதவியை நாடும் அல்லது வெளிநடப்பு மூலம் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்யும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RS.PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-201922:47:27 IST Report Abuse
RS.PRAKASH This one" NRC "amendment very good one for the Indian people brings that one Hon.Internal Affairs Minister of India.Amit shah hats off ..HE IS MORDERN IRON MAN OF INDIA"2.After they said to be Afg,Ban,Pak, muslims cannot others people to get verify NRC to get INDIAN RESIDENCY.3.Its not a multlingual country.4.If want Indian residency or citizenship of India.5.You must working with proper work permit for foreigners can allow work in india prolonged no problem nor otherwise can work illegaly cannot acceptable.5.And than also foreigners like buy the property,Working Man,Highly qualified Technicians,Engineers,Doctors can apply with your work permit to get naturally apply for Indian government for residential status or Citizenship status to verify by Indian Government.6.If its acceptable eligible criteria to get residential status of indian and citizen of easily approved by the indian government.JAI HIND..
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Chennai,இந்தியா
09-டிச-201922:02:52 IST Report Abuse
KavikumarRam தென்னகத்து பப்புவும் வட இந்திய சுடலையும் மாஞ்சு மாஞ்சு இத எதிர்க்கிறது பாத்தா கண்டிப்பா இது நாட்டுக்கு மிகத்தேவையான நல்ல ஒரு மசோதாவாகத்தான் இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
09-டிச-201920:55:24 IST Report Abuse
GMM ஆப்கான், பாக். பங்களாதேஷ் நாடுகள் இந்திய நில பகுதியை பிரித்து, இஸ்லாம் நாடுகளாக ஆக்கி குடி உரிமை பெற்றனர். இஸ்லாமியருக்கு நாடுகள் உண்டு. 1947 க்கு பின் இந்திய-இஸ்லாமியர் இந்திய பிரஜைகள். பிற இஸ்லாமிய ஊடுருவல், அகதிகளுக்கு இடம் கொடுத்தால், இரட்டை குடி உரிமை ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X