சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு

Added : டிச 09, 2019
Advertisement
கீழ் கோத்தகிரி , பூமி உள்வா்கியது, ஆய்வு, கலெக்டர், மணிவண்ணன், புவியியல் துறை, போக்குவரத்து, மண் தரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே மெட்டுக்கல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக 100 மீ சுற்றளவில் பூமி திடீரென உள்வாங்கியது. இதனால் 5 ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அவருடன் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானியான மணிவண்ணன் மற்றும் கோத்தகிரியின் சில அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக மணிவண்ணன் பேசுகையில், பூமி மிகவும் உள்வாங்கியுள்ளது. இந்த பகுதியில் மண்ணின் தரம் உறுதியாக இல்லை. மண் இளகியுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பாக புவியியல் துறை அதிகாரிகளும் சில ஆய்வுகள் செய்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதுவரை இந்த பகுதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என கூறினார்.

இந்த நிகழ்வின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு மற்றும் பூமி உள்வாங்குதலால் குடியிருப்புகளுக்கு ஆபத்து ஆகிய சில பிரச்னைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X