பொது செய்தி

இந்தியா

தண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (12)
Advertisement
Water_crisis,India,NITI_Aayog,water,contaminated,Report,Parliament,இந்தியா,தண்ணீர்,நிதி ஆயோக்

புதுடில்லி: 122 நாடுகளில் நடத்தப்பட்ட தண்ணீர் தர ஆய்வில் இந்தியா 120வது இடம் பெற்றுள்ளது என நிதி ஆயோக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது: நிதிஆயோக் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டில் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். தண்ணீர் தர ஆய்வு குறித்து 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 120வது இடம் பெற்று மிக மோசமான நிலையில் உள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத நீர், இந்தியாவில் மாசுபட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.





5வது நீர்பாசன கணக்கெடுப்பின்படி, நாட்டில் 20.52 மில்லியன் கிணறுகள் உள்ளன. இதில் தோண்டப்பட்ட கிணறுகள், ஆழமற்ற குழாய் கிணறுகள், ஆழமான குழாய் கிணறுகள் மற்றும் நடுத்தர குழாய் கிணறுகள் அடக்கம். ஆனால் நிதிஆயோக் புள்ளி விவரங்களில் தோண்டப்பட்ட கிணறுகள் கணக்கில் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தனிக்குழு:


ராஜ்யசபாவில் பேசிய கஜேந்திர சிங் செகாவாத் பேசியதாவது: நாட்டில், 256 மாவட்டங்களில், 1,500 பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யாருக்கும் இனியவன்... எதுக்கு எடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்வது ஒரு வியாதி... தண்ணீர் மாசுபடுவதற்கு அரசாங்க மட்டும் தான் காரணமா? ஒவ்வொரு கூமுட்டை மனுஷன் தான் காரணம்... தண்ணீர் ஏன் மாசுபடுதுனு இங்கு கருத்து போடற யாருக்கும் தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-டிச-201904:37:21 IST Report Abuse
Mani . V ஹை..... ஹை..... ஜாலி.... ஜாலி.... சதத்தை தாண்டி வெற்றி நடை போடுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201923:15:27 IST Report Abuse
ஆப்பு இதப் பத்தி ஜல்சக்தி அபியான் என்ன சொல்லுது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X