என்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ஏற்பு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (47)
Advertisement
Hyderabad,rape,murder,encounter,Telangana,Police,SC,Supreme_Court,என்கவுண்டர், போலீசார்

புதுடில்லி: தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரை, என்கவுன்டர் செய்த போலீசார் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

தெலுங்கானாவில் நவ.,27ம் தேதி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இரவு வீடு திரும்பிய அவரது பைக் டயரை பஞ்சர் செய்து, அவருக்கு உதவுவது போல நடித்து, 4 லாரி டிரைவர்கள் பலாத்காரம் செய்தனர். அவரது வாயில் மதுவை ஊற்றி, கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண் டாக்டர் கொல்லப்பட்ட இடத்தில், குற்றம் நடந்தது எப்படி என நடித்துக் காட்டிய போது, போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயற்சித்த 4 கயவர்களையும், கடந்த 6ம் தேதி, போலீசார் சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்தில், போலீசாரை பொதுமக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். 4 பேரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டது அனைத்து தரப்பினரிடையேயும், பலத்த வரவேற்பை பெற்றது.





இந்நிலையில் என்கவுன்டருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வக்கீல்களான மணி, பிரதீப் குமார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: என்கவுன்டர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. என்கவுன்டர் செய்த போலீசார்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் விசாரணையையும் கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நாளை மறுநாள்(டிச.,11) இம்மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201914:57:40 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வழக்கு போட்டவர்கள் திமுக ஆட்களோ , கனிதான் வழக்கு போடச்சொல்லி இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
10-டிச-201914:01:17 IST Report Abuse
chenar மக்கள் சுதர்சன பத்பநாபன் விஷயத்தில் சட்டத்தை கையில் எடுத்தால் என்னவாகும் என்று சொல்வீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
10-டிச-201912:33:05 IST Report Abuse
konanki சுப்ரிம் கோர்ட் ஒருமணி நேரம் நடக்க மக்களின் வரிப் பணம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிட்டு ,இந்த வழக்கை விசாரிக்கிற நேரம் சுமார் 30 மணி நேரம் என்றால் அந்த மொத்த பணத்தையும் டொபஸிட்டாக இந்த வக்கீல்கள் கட்ட வேண்டும். பிறகு தான் இந்த வழக்கை தொடங்க வேண்டும். ஒருவேளை இந்த மனு தள்ளுபடி செய்ய பட்டால் டெபாசிட் தொகை அரசாங்க வருவாய் ஆக வேண்டாம்.
Rate this:
Share this comment
SelvaRaj - San Jose,யூ.எஸ்.ஏ
12-டிச-201909:09:44 IST Report Abuse
SelvaRajஏன்? நீதி மன்றங்கள் வழக்கு நடத்த நிறுவ பட்டவை. ஒரு மனுவை ஏற்பதும், மறுப்பதும் சட்டம் ரீதியாக நடை பெரும் ஒன்று. உங்களுக்கு இது பிடிக்க இல்லை என்பதால் மட்டும் இந்த மாதிரி செய்ய இயலாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X